ரூ.1.8 கோடியில் வீடு… ஆல்யா மானசாவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரூ.1.8 கோடியில் வீடு… ஆல்யா மானசாவின் ஒரு நாள் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ராஜா ராணி தொடரில் ஜோடியாக நடித்ததன் ரியல் ஜோடியாக மாறியவர்கள் தான் ஆலியா மானசா சஞ்சீவ் ஜோடி. இவர்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை, ஆண் குழந்தை இருக்கிறார்கள்.

அழகிய குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசா புகைப்படத்துடன் குட் நியூஸ் ஒன்றை கூறியுள்ளார். அதாவது ஆல்யா மற்றும் சஞ்சீவ் இருவரும் சென்னையில் ரூ.1.8 கோடியில் வீடு கட்டிக்கொண்டு வருகிறார்கள் என முன்னரே செய்திகள் வெளியானது.

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஆலியா மானசா, ஒரு சின்ன வீட்டில் நாங்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டு வாழ்ந்து வந்தோம். எனவும், அதனால் இப்போது எங்கள் ஆசைப்படி வீடு வாங்கி இருக்கிறோம் எனவும், இந்த வீடு சுமார் 1.8 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ளதாகவும், அதை முழுக்க முழுக்க லோனில் கட்டியுள்ளதாகவும் மானசா கூறிருந்தார்.

இதைத் தொடர்ந்து அவர் சம்பளம் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, கடந்த 2022ம் ஆண்டு இனியா தொடரின் மூலம் ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை சம்பளமாக தரப்பட்டது எனவும், தற்பொழுது ஒரு நாள் ஷூட்டிங்கிற்கு சுமார் ரூ. 50,000 முதல் ரூ. 60,000 வரை சம்பளம் வாங்குவதாகவும் அவர் கூறியுள்ளார்.

alya manasa, sanjeev, ஆலியா மானசா, சஞ்சீவ் , sanjeev , latest cinema news ,