YouTubeல் பேட்டி கொடுத்து வைரல் ஆனால், MP ஆக முடியும் என்று உலகிற்கே ஒரு உதாரணத்தை காட்டியவர் மருத்துவர் அர்ச்சுணா. இதனை சாதித்துக் காட்டியது யாழ் தமிழர்கள். சரி நடந்தது நடந்ததாகவே இருக்கட்டும். நேற்றைய தினம் பாராளுமன்றம் சென்ற, மருத்துவர் அர்ச்சுணா தனது 3வது காதலியையும் அழைத்துச் சென்றுள்ளார்.
எந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் இதுபோலச் செய்யவில்லை. அவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும், அவதானத்தோடும் வந்திருந்தார்கள். ஆனால் மருத்துவர் அர்ச்சுணா மட்டுமே இவ்வாறு சென்றுள்ளார். அதுமட்டும் இன்றி, அவர் தனது காதலியோடு சிற்றுண்டிச் சாலை சென்று அங்கே பிரியாணி சாப்பிட்டு. அதனை செல்ஃபி எடுத்து முக நூலில் போட்டுள்ளார். இது தான் இவர் தமிழர்களுக்காகச் செய்த முதல் காரியம்.
இந்த கோமாளியை பாராளுமன்றம் அனுப்பிய மக்கள், அடுத்து வரும் 4 வருடங்களில் முறையான ஒரு பாடத்தைக் கற்றுகொள்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.