கண்டம் விட்டு கண்டம்.. அணுகுண்டை தாங்கி செல்லும் திறன் கொண்டது.. ரஷ்யா அவிழ்த்துவிட்ட ராட்சசன்

கண்டம் விட்டு கண்டம்.. அணுகுண்டை தாங்கி செல்லும் திறன் கொண்டது.. ரஷ்யா அவிழ்த்துவிட்ட ராட்சசன்

மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் தாண்டி செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை அல்லது ICBM ஏவுகணைகளை ஏவி தாக்கி உள்ளது. இது அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் திறன் கொண்டது

இதை தேவைக்கு ஏற்றபடி பயன்படுத்திக்கொள்ளலாம். தேவையான நேரத்தில் அணு குண்டை வைத்து ஏவலாம். இல்லையென்றால் அணுகுண்டு இல்லாமல் ஏவ முடியும். இதை போர்க்கப்பலில் இருந்தும் கூட ஏவ முடியும். பொதுவாக இந்த ஏவுகணையை ஒரு நாடு பெரிய போரில் மட்டுமே பயன்படுத்தும்.

அல்லது பெரிய சோதனைகளை செய்தால் பயன்படுத்தும். அணு குண்டு சோதனைகளை மேற்கொள்ள இது போன்ற கண்டம் தாண்டி செல்லும் பாலிஸ்டிக் ஏவுகணை பயன்படுத்தும். இப்படிப்பட்ட ஏவுகணையை உக்ரைன் மீது ரஷ்யா பயன்படுத்தி உள்ளது. இதனால் எங்கே ரஷ்யா அடுத்து அணு ஆயுத தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போக ரஷ்ய அதிபர் புடின்.. ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. பொதுவாக அணு ஆயுத ஷெல்டர்கள்.. அணு ஆயுத தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் பங்கர்கள் ஆகும்.

முக்கிய தலைவர்கள்.. பெருமளவிலான மக்களை பாதுகாக்கும் விதமாக பங்கர்கள் அமைக்கப்படும். அணு கதிர்வீச்சு பாதிக்காத வகையில் பாதுகாப்பாக பல மீட்டர் அகலமான சுவர்கள் பூமிக்கு அடியில் சுரங்கமாக அமைக்கப்பட்டு இருக்கும். இது போன்று உலகம் முழுக்கவே பங்கர்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யாவில் இருக்கும் அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்யும்படி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.

அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்த கூடாது என்ற விதியை வைத்து உள்ளது ரஷ்யா. ஆனால் இந்த விதியை ரஷ்யா தற்போது அதிபர் புடின் உத்தரவின் பெயரில் மாற்றி உள்ளது. அதன்படி அணு சக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்ய அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி உக்ரைன் உள்ளிட்ட அணுசக்தி இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த வேண்டும்.. என்று புடின் ஒப்புதல் அளித்துள்ளார்.

இதன் மூலம் ரஷ்யாவின் கொள்கை மாற்றத்திற்கு அதிபர் புடின் ஒப்புதல் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பிடன்: இதற்கெல்லாம் காரணம் என்று பார்த்தால் ஒரு வகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடன்தான். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் செய்த தவறு காரணமாக.. உலக அளவில் அணு ஆயுத போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படி அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்க அதிபர் பிடன் அனுமதி அளித்துள்ளார். அவரின் இந்த முடிவை ரஷ்ய அதிபர் புடின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

ரஷ்ய அதிபர் புடினின் விமர்சனத்தில், அமெரிக்காவின் இந்த முடிவிற்கு உடனடியாக பதிலடி தரப்படும். அமெரிக்காவின் இந்த முடிவு நாங்கள் நேட்டோவுடன் நேரடி போரில் இருக்கிறோம் என்பதை உணர்த்துகிறது, என்று கூறி உள்ளார். அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை ரஷ்யா மீது பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி வழங்கினால் நாங்கள் நேட்டோவுடன் நேரடி போரில் இருக்கிறோம் என்று அர்த்தம் என்று புடின் ஏற்கனேவே கூறி இருந்த நிலையில்தான் பிடன் இந்த முடிவை எடுத்துள்ளார். அமெரிக்கா அதிபர் பிடனின் ஆட்சி காலம் இந்த மாதத்தோடு முடிகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் அமெரிக்க ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு பிடன் அனுமதி வழங்கி உள்ளார். ரஷ்யா மீது தாக்குதல் நடத்த வசதியாக இந்த உத்தரவை பிடன் பிறப்பித்துள்ளார். இத்தனை காலமாக.. நீண்ட தூர எல்லைகளுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அனுமதி இல்லாமல் இருந்தது.

இதனால் ரஷ்யாவை கடுமையாக தாக்க முடியாமல் உக்ரைன் தவித்து வந்தது. இப்படிப்பட்ட நிலையில்தான் உக்ரைன் இனி நீண்ட தூரத்திற்கு செல்லும் ஏவுகணைகளை இனி பயன்படுத்தலாம் என்று பிடன் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு இது மிகப்பெரிய சிக்கலாக மாறி உள்ளது.