8.45 மணிக்கு “விலகிச் சென்றாய் உயிரே” பாடலை முகநூலில் போட்டு விட்டு 10.30 மணிக்கு ரயில் முன் குதித்து தற்கொலை !

8.45 மணிக்கு “விலகிச் சென்றாய் உயிரே” பாடலை முகநூலில் போட்டு விட்டு 10.30 மணிக்கு ரயில் முன் குதித்து தற்கொலை !

கடந்த 19ம் திகதி இரவு , 10.32மணிக்கு லண்டன் Euston ரயில் நிலையத்தில், ஒருவர்,  ரயிலில் அடிபட்டுக் கிடப்பதாக அவரச அழைப்பு வந்தது. இதனை அடுத்து பரா மெடிக்ஸ் உட்பட , உயிர்காக்கும் மருத்துவ நிபுனர்கள் விரைந்தார்கள். கடுமையாகப் போராடியும் அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. அவர் தவறுதலாக ரயிலில் விழுந்தாரா ? இல்லை இது தற்கொலையா என்று மெற்றோ பொலிடன் பொலிசார் தடுமாறும் இந்தவேளையில்… அவர் வேறு யாரும் அல்ல, யாழ் பழைய இந்துக் கல்லூரி மாணவர் வாகீசன் ஜெயரட்ணம்.  A spokesperson for British Transport Police said: “Officers were called to Euston underground station at around 10.30pm yesterday (November 19) following reports of a casualty on the tracks.

சரியாக இரவு 8.45மணிக்கு “விலகிச் சென்றாய் உயிரே” என்னும் பாடலை, முகநூலில் தரவேற்றி இருக்கிறார். 10.30 மணிக்கு ரயில் நிலையத்தில் இருந்துள்ளார். இந்தப் பாடல் மகள் மற்றும் குடும்பத்தார் பிரிவதால், ஆண்களுக்கு உண்டாகும் வலி, வேதனை, மன அழுத்தம், மேலும் சொல்லப் போனால்,  ரணகளத்தை தெளிவாக புரியவைக்கும் பாடல் ஒன்று. வாகீசன் எந்த மன நிலையில் இருந்திருப்பார் என்பது, தற்போது எம்மில் பலருக்கு தெரிந்திருக்கும். அவர் அப்படி ஒரு முடிவை எடுக்க என்ன காரணம் என்பதும் புரிந்து இருக்கும்.

கடந்த சில வருடங்களாக வெளிநாடுகளில்,  தமிழர்கள் மத்தியில் இந்த கலாச்சாரம் அதிகரித்து விட்டது. (நாம் சொல்லும் கலாச்சாரம் பிரிந்து வாழ்வது), உங்களோடு வாழ முடியாது ! என்பது, விவாகரத்து கோருவது ….. இதனால் பிள்ளைகள் மன நிலை என்ன ஆகும் என்று பெற்றவர்கள் சிந்திப்பது இல்லை. பிடிக்கவில்லை என்றால் பிரிவு தான் முடிவு என்று ஏதோ வெள்ளைக்காரன் ரேஞ்சுக்கு முடிவை எடுக்கிறார்கள். நாம் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் , தமிழர்கள் தான் என்பதனை மறந்து விடுகிறார்கள்..  கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். 1000 பொய் சொல்லியேனும் ஒரு கல்யாணத்தை கட்டலாம் என்று கூட கூறுவார்கள்.

காரணம் திருமணத்திற்கு பின்னர் எல்லாமே மாறிப் போகும் என்பதனால் தான். இன்றைய தேதியில், சில குடும்பத்தினர் எப்படி இருக்கிறார்கள் என்றால்… அவர்கள் அப்படி இருக்கிறார்கள் எங்கள் நிலையை பார்த்தீர்களா ? அவர்கள் அந்தக் கார் வைத்திருக்கிறார்கள் எங்களிடம் இல்லை. அவர் அவ்வளவு நகை போட்டுக் கொண்டு வந்தார், நீங்கள் என்ன வாங்கித் தந்தீர்கள் ? இப்படி ஒப்பிட்டுப் பேசியே, வாழ்கையை தொலைத்து நிற்க்கும் குடும்பங்களை நாம் பார்கிறோம். மகள் மற்றும் மகன் ஆகியோர் பிரிந்து அம்மாவுடன் சென்ற சோகத்தில் இன்று இவர் எடுத்த முடிவு,  வேறு எந்த ஒரு நபருக்கும் வந்துவிடக் கூடாது. வாகீசன் ஆத்மா சாந்தியடைய அதிர்வு இணைய வாசகர்களும் பிரார்த்திப்போம் !