70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு, மாதம் தோறும் 3,000ரூபா இலவசமாக கொடுக்கப்படும் என்று, தனது தேர்தல் வாக்குறுதியில் அனுரா தெரிவித்து இருந்தார். இதனைத் தொடர்ந்து இன்று முதல், குறித்த 3,000ரூபா உதவித் தொகை பலரது வங்கிக் கணக்கில் விழுந்துள்ளது. இதனை அடுத்து பல ஆயிரக்கணக்கான முதியவர்கள், அனுராவைப் பாராட்டி வருகிறார்கள். நாடு தழுவிய ரீதியில் சுமார் 6 லட்சம் பேர் இந்தத் உதவித் தொகையை பெற ஆரம்பித்துள்ளார்கள்.
“அஸ்வெசும” என்று அழைக்கப்படும் இந்த உதவித் திட்டம் ஊடாகவே தலா 3,000ரூபா வழங்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே நாட்டு மக்கள் அனுராவை ஆதரித்து வரும் நிலையில். இந்த திட்டம் ஊடாக அனுராவின் செல்வாக்கு மேலும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இன்றைய தேதிக்கு, இலங்கையில் உள்ள முதியவர்கள் பலர் அனுரா பற்றியே பேசி வருகிறார்கள்,