கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் ஷாருக். இவரது தந்தை ரியாஸ்கான் தமிழ் திரைப்படங்களில் பல்வேறு படங்களுக்கு வில்லனாக நடித்திருக்கிறார்.
மேலும் சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்திருக்கிறார். ஷாரிக்கின் தாயார் நடிகை கமலா காமேஷின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாரிக்கின் தாயான உமா குக் வித் கோமாளி சீசன் ஒன் நிகழ்ச்சிகள் கூட பங்கேற்று இருந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மகன் ஷாரிக் திரைப்படங்களில் நடித்து வரும் நிலையில் திடீரென அவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. இவர்களுக்கு செப்டம்பர் 8ம் தேதி திருமணம் சென்னையில் நடைபெற்றது. இந்நிலையில் இந்த திருமண வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதில் ஷாருக் மணப்பெண்ணுக்கு லிப் கிஸ் கொடுப்பதை பலரும் கலாய்த்துள்ளனர்.
ஷாரிக் , பிக்பாஸ் ஷாரிக் , shariq riyaz khan , shariq riyaz khan wedding video