மிரட்டலான தோற்றத்தில் KGF யாஷ்…. வைரலாகும் வீடியோ!

மிரட்டலான தோற்றத்தில் KGF யாஷ்…. வைரலாகும் வீடியோ!

கன்னட சினிமாவையே உலக அளவில் திரும்பி பார்க்க செய்தவர் தான் நடிகர் யாஷ். கன்னட திரைப்பட நடிகர் ஆன இவர் கே ஜி எஃப் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்ததன் மூலமாக ஒட்டுமொத்த உலக சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக பார்க்கப்பட்டார்.

அதற்கு முன்பு வரை கன்னட சினிமா என்றால் பெரிதாக ஓடாத படங்களாகவும் மிகப்பெரிய அளவில் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்படாத படங்களாகவும் பேசப்பட்டு வரும். ஆனால், கே ஜி எஃப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கன்னட திரைப்பட உலகின் ரேஞ்சே வேற லெவலுக்கு சென்றுவிட்டது.

அதே போல் நடிகர் யாஷ் புகழ் பெற்ற நடிகராக மாறிவிட்டார். இதனால் அவருக்கு உலகம் முழுக்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இப்போது கன்னட சினிமாவின் நட்சத்திர நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும். நடிகர் யாஷ் டாக்ஸிக் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்த வருவதாக கூறப்படுகிறது இந்த நிலையில் நடிகர் யாஷ் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவரது லுக்கே மிரட்டலான தோற்றத்தில் இருப்பதை பார்த்து ரசிகர்கள் இந்த வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள்.

https://x.com/MNVGowda/status/1811682126305034345?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1811682126305034345%7Ctwgr%5E465a39ed8b5fad86675fcbf83a729376fd0a68de%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fcineulagam.com%2Farticle%2Fkgf-yash-new-look-for-toxic-movie-1720778582