நான் 10th Fail…. அப்பா முன்னாடி – அக்ஷரா ஹாசன் Open டாக்!

நான் 10th Fail…. அப்பா முன்னாடி – அக்ஷரா ஹாசன் Open டாக்!

கமலஹாசனின் இளைய மகளும் தமிழ் சினிமாவில் இளம் நடிகையுமான அக்ஷரா ஹாசன் விவேகம், கடாரம் கொண்டான் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறியப்பட்டார். ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் இவருக்கான தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறார்கள்.

குறிப்பாக இவரது பூனை கண்ணழகு காந்தம் போல் இருப்பதாக ரசிகர்கள் பலரும் அவரின் அழகுக்கு அடிமையாகி விட்டார்கள். குறிப்பாக அவரது குழந்தைத்தனமான சுபாவமும் பேச்சும் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்றே சொல்லலாம். சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அக்ஷரா ஹாசன் தான் பத்தாம் வகுப்பில் பெயிலாகி விட்டேன் என்பதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார் .

அதனால் நான் மிகவும் அசிங்கப்பட்டேன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்ல முடிவெடுப்பதில் மிகவும் கடினமாக இருந்தது.என்னுடைய அப்பாவிடம் நான் அது குறித்து ஆலோசித்த போது எனக்கு படிப்பு வரவில்லை. நடனத்தின் மீது அதிக ஆர்வம் இருக்கிறது.

அதன் மூலம் நான் என்னை வளர்த்துக் கொள்கிறேன் என கூறியதாக இந்த பேட்டியில் கூறியிருக்கிறார். மிகப்பெரிய நட்சத்திர நடிகராக இருந்த கமல்ஹாசனின் மகளே பத்தாவது வகுப்பில் பெயிலாகி இருக்கும் இந்த விஷயத்தை அவரே வெளிப்படையாக தெரிவித்து இருப்பது அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது. உண்மையை ஒப்புக்கொள்ளவே ஒரு தைரியம் வேண்டும்!