அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்று முடக்கப்பட்ட பெண்கள் இன்று ஆடை சுதந்திரத்தைப் பற்றி பேசுவது முன்னேற்றத்திற்கு உரிய விஷயமே. இப்படி போராட்டங்களுக்கு பின் கிடைத்த இந்த பெண் சுதந்திரத்தை நடிகைகள் சிலர் தவறாக சித்தரிக்கிறார்களோ என்று அச்சப்பட வேண்டியுள்ளது.
பப்ளிசிட்டிகாகவும் துணிச்சலாகவும் ஹீரோயின்கள் சிலர் இந்த மாதிரியான அடல்ட் படங்களை தேர்ந்தெடுத்து அதை நியாயப்படுத்தவும் செய்கின்றனர். நெருப்பு என்று உணர்ந்தால் போதாதா அதை காயப்படுத்தி காண்பிப்பதில் என்ன பயன்?
அமலாபால்: இரட்டை அர்த்த வசனங்கள் நிறைந்த ஆடை படத்தில் ஆடை இன்றி துணிச்சலாக நடித்த அமலாபால் கம்யூனிசமும் பெண்ணியமும் பேசி இருந்தாலும் கூட பார்ப்பவர்களை முகம் சுளிக்கவே செய்தது. இப்படி எல்லாம் நடக்குமா என்று அறியாதவர்கள் கூட அறிவது தான் படத்தின் ஹைலைட்!
ஓவியா: ஓவியா ஆர்மி தந்த அசட்டு தைரியத்தில் 90 எம் எல் போன்ற அடல்ட் படங்களில் நடித்து சமூகத்திற்கு ஏதோ கருத்து சொல்ல வருகிறார் இந்த ஓவியா. இப்படி இவர் சொல்லும் கருத்துக்கள் குடும்பத்திற்கு போய் சேராதது தமிழ் சினிமாவின் பாக்கியமே. அடல்டிற்கு நார்மலாக சொன்னால் புரியாதா டபுள் மீனிங்கில் சொன்னால் மட்டும்தான் புரியுமா என்று சமூக ஆர்வலர்களை கொதிக்க வைத்தார் ஓவியா.
யாஷிகா ஆனந்த்: அடல்ட் மட்டுமே பார்க்கும் படங்களில் நடிக்க யோசனையின்றி ஓகே சொல்லும் யாஷிகா ஆனந்த் இயக்குனர்களின் விருப்பத்தேர்வாக இருந்தார். புட்டியை தொட்டு புத்தி கெட்ட காரணத்தினால் விபத்தில் சிக்கி தோழியை பறிகொடுத்து ஓடவும் முடியாமல் ஒளியவும் முடியாமல் உள்ளார்.
ராதிகா ஆப்தே: பாலிவுட்டில் இவரது சர்ச்சையான படத்தை பற்றி நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ஒரு திரைப்படம் நன்றாக வருவதற்கு என்ன செய்யச் சொன்னாலும் அதை செய்வேன் என்று அதிரடியாக பேசினார் ராதிகா ஆப்தே. இயக்குனருக்கு வேற என்ன வேண்டும் இந்த அர்ப்பணிப்பு உள்ள நடிகையை தவற விடுவார்களா இயக்குனர்கள்.
ரேகா நாயர்: இரவின் நிழல் படத்தின் சர்ச்சையான கேரக்டரில் நடித்து முகம் சுளிக்க வைத்த ரேகா நாயர் எந்த இடத்திலும் அவருக்கு சரியான படும் கருத்துக்களை தைரியத்துடன் முன்வைத்து பல சர்ச்சைகளை கிளப்புவதில் வல்லவர். ஆடை சுதந்திரத்தைப் பற்றி அப்பட்டமாக பேசும் ரேகா நாயர் இயக்குனர் கூறும் திரைக்கதையுடன் சமரசமாகும் எந்த கதாபாத்திரமானாலும் ஏற்று நடிக்க ரெடியாகவே உள்ளார்.