அறம் வெல்லும் என்ற ஒற்றை வாக்கியத்தை மூச்செனபிடித்துக் கொண்டு மேடையின் இறுதிவரை போராடியவர் பிக் பாஸ் சிக்ஸ் டைட்டில் ரன்னர் ஆப் விக்ரமன் அவர்கள். இவர் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தி அலை கழித்து வருகிறார்.
கடந்த பிக் பாஸ் சீசனுக்கு பின் தனியாக யூடியூப் சேனல் துவங்கி தனக்கான கருத்தையும் நியாயத்தையும் பதிவு செய்து வந்திருந்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இணை செய்தி தொடர்பாளர் விக்ரமன் மீது பெண் வழக்கறிஞர் கிருபா முனுசாமி என்பவர் அடுக்கடுக்காக புகார் அளித்து பூகம்பத்தை கிளப்பியுள்ளார்.
மேலும் விக்ரமன் மீது என்னை காதலிப்பதாக கூறி ஏமாற்றி 12 லட்சத்திற்கும் மேல் செலவு செய்ய வைத்துள்ளதாகவும், வேறு பல வார்த்தைகளால் காயப்படுத்தியதாகவும் தற்காலைக்கு தூண்டிஉள்ளார் எனவும் பல்வேறு குற்றங்களை சுமத்தி உள்ளார் இந்த பெண் வழக்கறிஞர்.
இதனை மறுத்த விக்ரமன் என் மேல் பொய் புகார் அளித்து உள்ளார் கிருபா முனுசாமி. என் மீது சுமத்தி இருக்கும்அத்தனை குற்றச்சாட்டுகளையும் நான் மறுக்கிறேன் இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் தான். அது நான் தான் என்று சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார்.
முதலில் இதைக் கண்டு கொள்ளாத காவல்துறையை கண்டித்து நேரடியாக உயர்நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் கிருபா. இவர் அளித்த புகாரின் பேரில் சென்னை வடபழனி மகளிர் காவல் நிலையத்தில் 13 க்கும் மேற்பட்ட வழக்குகள் விக்ரமன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரமனை காவல் ஆணைய அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி உத்தரவு பிறப்பித்தது காவல்துறை. இதனால் காவல் ஆணைய அலுவலகம் வந்து புகார்களுக்கு விளக்கம் அளித்த விக்ரமன் அங்கு கூடியிருந்த செய்தியாளர்களிடம் பதில் ஏதும் கூறாமல் தன்னிடம் இருந்த கோப்புக்கள் மூலம் முகத்தை மறைத்துக் கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். அறம் வெல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.