Body Shaming குறித்து மோசமான கருத்து…. கோபத்தில் கொந்தளித்த நமீதா பதிலடி!

Body Shaming குறித்து மோசமான கருத்து…. கோபத்தில் கொந்தளித்த நமீதா பதிலடி!

பப்லி லுக் தோற்றத்தில் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை நமீதா தமிழ் சினிமா ரசிகர்களையும் மச்சான் என அழைத்து மனதை மயக்கி இழுத்தவர் நடிகை நமீதா. இவர் தொடர்ச்சியாக தமிழ் , கன்னடம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பழமொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் .
படங்களில் தாறுமாறான கவர்ச்சியை வெளிப்படுத்தி நடித்ததன் மூலமாக மிக குறுகிய காலத்திலேயே நமீதா மக்களின் ரசனைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டார். இவரது கவர்ச்சி அழகுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாக்கினர்.

இதை அடுத்து சினிமாவில் சில காலம் ஆளே அட்ரஸ் இல்லாமல் போய்விட்டார். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை நமீதா. தற்போது 43 வயதாகும் நடிகை நமீதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வீரேந்திர சவுத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தற்போது இரட்டை ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், தற்ப்போது பாடி ஷேமிங் குறித்து தனக்கு நடந்த கசப்பான அனுபவத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.’ எனது உடல் மற்றும் சமநிலையற்ற ஹார்மோன் பிரச்சனைகள் மற்றவர்களுக்கு தெரியாது. அது பற்றி அவர்களிடம் சொன்னால் கூட அது சாதாரண விஷயம்தானே என்றார்கள். இந்த விஷயம் எனக்கு மிகுந்த மனஉளைச்சலை கொடுத்தது.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது எனது எடை கூடிய உடல் புகைப்படத்தை குளோசப் ஆக வெளியிட்டு ஏதேதோ குறிப்பிட்டு இருந்தனர். அந்த விஷயம் எனக்கு ரொம்ப பாதித்தது. வருத்தமடைந்தேன். அதனால் நான் 25 கிலோ எடை வரை குறைத்தேன். எல்லோரிடமும் இண்டர்நெட் வசதி இருப்பதால் மனதில் நினைத்ததை எல்லாம் வெளியே கொட்டுகிறார்கள். தவறாக பேசும் நபர்கள் மீது புகார் கொடுக்கலாம் என்று என்னிடம் கணவர் கூறினார். ஆனால் நான் வேண்டாம் என்று தெரிவித்ததாக நமிதா கூறியுள்ளார்.