போலந்தில் மட்டும் அல்ல முழு ஐரோப்பாவிலும் உள்ள நேட்டோ படைகள் உச்சகட்ட உஷார் நிலையில் தற்போது உள்ளார்கள் என்ற செய்தி கசிந்துள்ளது. போலந்தில் உள்ள நேட்டோ படைத்தளத்தில் உள்ள அணு குண்டுகள் இருக்கும் தளங்களை மட்டும், முதலில் தாக்கி அழிப்பது என்று ரஷ்யா முடிவுசெய்துள்ளதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து, நேட்டோ படையணி உஷார் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்தச் செய்தி வெளியாகிய 18 மணி நேரத்தில்.
சுமார் 12 அணு குண்டு ஏவுகணைகளை ரஷ்யா அண்டை நாடான பெலருஸுக்கு அனுப்பியுள்ளதை அமெரிக்கா சற்று முன்னர் உறுதிசெய்துள்ளது. அமெரிக்க உளவு சாட்டலைட் இந்த நகர்வுகளை துல்லியமாக கண்டுபிடித்துள்ளதாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் அண்டை நாடான பெலருஸ், அதிபர் புட்டினின் மிக நெருங்கிய நண்பர் ஆவார். ஒட்டு மொத்தமாகச் சொல்லப் போனால் , பெலருஸ் நாடு என்பது ரஷ்யாவின் ஒரு அங்கம் என்றே கூறலாம்.
இதனால் பெலருஸ் நாட்டை பாவித்து ரஷ்யா அணு குண்டை போலந்து மீது ஏவக் கூடும் என்று நம்பப்படுகிறது. எனவே பெலருஸ் குண்டை ஏவினால், பெலருஸ் நாட்டின் மீது தான் நேட்டோ படையணி தாக்க முடியும். ரஷ்யா மீது தாக்க முடியாது அல்லவா. இப்படியான ஒரு குறுக்கு வழியை புட்டின் கையாள்வார் என்று கூறப்படுகிறது. எது எப்படி என்றாலும் தற்போது ஒரு 3ம் உலகப் போர் ஆரம்பமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதே யதார்த்த நிலை ஆகும்.
Source : https://www.dailymail.co.uk/news/article-13350241/russia-threatens-poland-strike-nato-nukes-primary-target.html