லண்டனில் பக்கிங்ஹாம் மாளிகைக்கு அருகாமையில், காவலுக்கு பயன்படுத்தப்படும் 2 குதிரைகள் கயிறை அறுத்துக் கொண்டு வீதியில் ஓடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் வெள்ளைக் குதிரை ஏற்கனவே ஒரு காருடன் மோதுண்டதால் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் ஓடிக்கொண்டு இருந்தது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இக் குதிரைகள் இரண்டும் எப்படி தப்பித்தது என்பது ஒரு புறம் இருக்க.
குறித்த 2 குதிரைகளும் கட்டுக்கு அடங்காமல் கயிற்றை அறுத்துக் கொண்டு சொர்ணாக்கா ரேஞ்சில் ஓடியது போதது என்று, இரண்டு பேர் மீது முட்டி மோதி அவர்களையும் காயப்படுத்தியுள்ளது. இந்தக் குதிரைகள் தொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள் வெளியாகியுள்ளது. இவை அரச குடும்பத்திற்கு சொந்தமான குதிரைகள் என்று சில மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்தக் குதிரைகள் மெற்றோ பொலிடன் பொலிசாரின் குதிரைகள் என்று இன்னும் சில மீடியாக்கள் குறிப்பிடுகிறது.
எது எப்படி என்றாலும் அரச குடும்பத்தை காப்பாற்ற பிரித்தானிய அரசு, எந்த ரெஞ்சுக்கும் இறங்கும் என்பது ஊர் அறிந்த விடையம். இதனால் தான் இதனை பொலிசாரின் குதிரை என்று முத்திரை குத்தினார்களோ தெரியவில்லை. கீழே வீடியோ இணைப்பு.
Surce : https://www.dailymail.co.uk/news/article-13344929/Rampaging-Household-Cavalry-horses-spooked-builders-moving-concrete-Noise-caused-animals-exercise-unseat-four-soldiers-ran-loose-six-miles-London-smashed-cars-bus-pedestrians.html