உலக செல்வந்தர் வரிசையில் இடம்பிடித்த மற்றும் இந்தியாவில் மிகவும் செல்வாக்கு மிக்க நபராக இருப்பவர் கவுதம் அதானி. மேலும் அதானி குழுமத்தின் தலைவர். நேற்றைய தினம் இவருக்கு எதிராக அமெரிக்க நியூயோர்க் நீதிமன்றம் பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளது. அதானியை கைதுசெய்து அமெரிக்கா கொண்டுவருவதற்கான பிடியாணை அதுவாகும். இந்த வழக்கில் அதானி எப்படிச் சிக்கினார் ? விரிவாக அறிந்துகொள்வோம்…
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான SECI எனப்படுகிற Solar Energy Corporation of India – நிறுவனத்திடம் இருந்து தமிழ்நாடு, ஆந்திரா, சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் மின்சார வாரியங்கள் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக, மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தது அதானி குழுமம்; இதன் மூலம் SECI – இடம் இருந்து திட்டங்களைப் பெற்றார். இதற்காக அதானி சுமார் 2,000கோடியை மாநில அரசு அதிகாரிகளுக்கு லஞ்சமாக கொடுத்தே இந்த திட்டத்தைப் பெற்றும் கொண்டார்.
அட அதற்கும் அமெரிக்காவுக்கும் என்ன தொடர்பு என்று ஜோசிக்கத் தோன்றும். அதானி விட்ட பெரிய பிழை அதுதான். இந்த திட்டத்திற்காக அதானி, அமெரிக்காவில் உள்ள பெரும் முதலீடு நிறுவனங்களை அணுகி, 20,000 ஆயிரம் கோடி அமெரிக்க டலர்களை முதலீடாகப் பெற்றுள்ளார். இதனை எப்படியோ மோப்பம் பிடித்த அமெரிக்க ஹிண்டர் பார்க் என்னும் நிதி நிறுவனம், அமெரிக்க நியூயோர்க் நகர நீதிமன்றில் வழக்கு ஒன்றைத் தொடுத்தது.
அமெரிக்காவிடம் நிதி பெற்று அதன் பின்னர் லஞ்சம் கொடுத்து, அதானி இந்த திட்டத்தை இயக்குகிறார் என்பதே குற்றச்சாட்டு. அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் என்கிற நிதி ஆய்வு நிறுவனமானது ஏற்கனவே அதானி குழுமம் மீது பங்குச் சந்தை மோசடி புகார்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்திய பங்குச் சந்தை ஆணையத்தின் தலைவரான மாதவி புச் மற்றும் அதானி குழுமங்களிடையேயான வர்த்தக உறவு தொடர்பாகவும் ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையால் உருவான புயல் இந்தியாவில் இன்னமும் ஓயவில்லை.
இந்த வழக்கில் கவுதம் அதானி, அவரது உறவினரான சாகர் அதானி உள்ளிட்ட 7 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை அதானியை மோடி காப்பாற்றி வருவதாக ராகுல் காந்தி உட்பட அனைத்து எதிர்கட்சியினரும் குற்றம் சுமத்தி வருவதோடு. இந்தியா அதானியை அமெரிக்காவுக்கு நாடு கடத்தவேண்டும் என்று கோரி வருகிறார்கள். இதனால் நரேந்திர மோடியின் செல்வாக்கே சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை மோடி எப்படி கையாளப் போகிறார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்கவேண்டும்.
அமெரிக்கா , “ஆப்பரேஷன் ஏஞ்சல்” என்ற பெயரில் அதானியை அமெரிக்காவுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இந்திய அதிகாரிகளுக்கு தெரியாமல் அவரை அமெரிக்கா கொண்டு செல்ல, முடியும் என்றும் கூறப்படுகிறது. இதனை இந்திய மத்திய அரசு தடுக்குமா ?