இதுவரை காலமும் அமெரிக்க சென்ட் சபையில், இழு பறி நிலையில் இருந்த பிரச்சனை சில தினங்களுக்கு முன்னர் சுமூகமாக முடிவடைந்துள்ளது. அதன் அடிப்படையில், சுமார் 60 பில்லியன்(அதாவது 6,000 மில்லியன்) அமெரிக்க டாலர் பெறுமதியான அதி நவீன ஆயுதங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்க உள்ளது. இதேவேளை 26 பில்லியன் டாலர்கள்(2,600 மில்லியன்) ஆயுதங்களை இஸ்ரேலுக்கும் வழங்க, அமெரிக்க சென்ட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ஆயுதங்கள் உக்ரைன் நாட்டை அடைந்தால், அது ரஷ்யாவுடன் நேரடியா மோதுவதற்கு சமன் என்று ரஷ்யா அதிபர் புட்டின் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதோடு. 3ம் உலகப் போர் ஒன்றை ஆரம்பிக்க அமெரிக்க விரும்பியுள்ளது என்றும் கூறியுள்ளார். குறித்த ஆயுதங்கள் அமெரிக்காவில் இருந்து போலந்தில் உள்ள நேட்டோ கட்டளைத் தளம் சென்று , அங்கே இருந்து படிப்படியாக உக்ரைன் கொண்டு செல்லப்படும் என்று கூறப்படுகிறது.
இதில் பல வான் பாதுகாப்பு கட்டமைப்பு, டாங்கி எதிர்ப்பு பீரங்கிகள், கவச வாகனங்கள், குறும் தூர ஏவுகணைகள், என்று பல ஆயுதங்கள் அடங்குகிறது. இதனூடாக உக்ரைன், மிகப் பலம் பொருந்திய ஒரு நாடாக உருவாக உள்ளது. அதி நவீன ராடர்கள், மின் காந்த அலைகளை உருவாக்க கூடிய ஏவுகணைகள் என்று பல தரப்பட்ட ஆயுதங்களை அமெரிக்கா உக்ரைனுக்கு அள்ளிக் கொடுக்க உள்ளது. இது ரஷ்யாவுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாது, பெரும் முட்டுகட்டையாகவும் அமைய வாய்ப்புகள் உள்ளது.
Source : https://www.dailymail.co.uk/news/article-13342425/tiktok-ban-senate-israel-ukraine-aid-biden.html