தமிழில் நடித்தது என்னமோ ஒரு சில திரைப்படங்கள் தான் என்றாலும் தமிழ் சினிமா ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்ற நடிகையாக இளம் நடிகையாக அனைவரது கவனத்தையும் ஈர்த்த பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றிருக்கும் நடிகையாக இருப்பவர் அபர்ணா தாஸ்.
அவர் இவ்வளவு சீக்கிரம் திருமணம் செய்து கொள்வார் என சற்றும் எதிர்பார்க்கவில்லை அவரது தீவிர ரசிகர்கள். நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அப்போதே அவரது அழகை பார்த்து ரசிகர்கள் மயங்கி விழுந்துவிட்டார்கள்.
யார் இந்த நடிகை என கூகுளில் சர்ச் செய்து பார்க்கும் அளவுக்கு அவருக்கு மிகப்பெரிய அளவில் பேன் பேஸ் உருவாக்கி விட்டார்கள். அதன் பிறகு கவின் நடிப்பில் வெளிவந்த டாடா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் கவனத்தை பெற்றார். அந்த படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. இதனிடையே திடீரென அபர்ணாதா தனது நீண்ட நாள் காதலரான தீபக்கை இன்று திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
இந்த திருமண வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது. இந்த நிலையில், இன்று அபர்ணா தாஸ் மற்றும் தீபக்கின் திருமணம் கோலாகலமாக கேரளாவில் நடைபெற்று முடிந்துள்ளது. திருமணத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ: