சூரியா யோதிகா ஜோடி தமது பிள்ளைகளை வெளி உலகிற்கு அதிகமாக காட்டுவது இல்லை. பொதுவாக எல்லாப் பிரபலங்களும் இதனைத் தான் பின்பற்றுகிறார்கள். ஆனால் அவர்கள் ஏதாவது சாதனை செய்துவிட்டால் போதும், தங்களை அறியாமலே அவர்கள் பிள்ளைகளது புகைப்படங்களை சமூக வலையத் தளங்களில் போட்டு விடுவார்கள். அந்த வகையில் சூரியா-ஜோதிகாவின் மகன் தேவ், தற்போது கராத்தேயின் பிளாக் பெல்ட் வாங்கி சாதனை படைத்துள்ளார்.
ஜாடையில் அப்படியே அப்பா சூரியா போலவே காட்சி தரும் தேவ், உடல் பயிற்ச்சி செய்து மிகவும் கட்டுமஸ்தான உடல் வாகைக் கொண்டவர். அவருக்கு 6 பேக்ஸ் இருப்பதாக அவரது நண்பர்கள், கூறியுள்ளார்கள். இன் நிலையில் சூரியாவும் அவர் மகன் தேவ் வும் ஒன்றாக நிற்க்கும் புகைப்படம் ஒன்றும் வைரலாக பரவி வருகிறது. அப்பா சூரியா அதில் மிகவும் உணர்சிவசப்பட்டு காணப்படுகிறார். அதேவேளை மிகவும் பெருமைப்படும் வகையிலும் உள்ளார்.
வெறும் 14 வயதே ஆகும் தேவ், பிளாக் பெல்ட் எடுத்த விடையம் தாத்தா சிவகுமாரை மிகவும் பெருமைப்பட வைத்துள்ளதாக கூறுகிறார்கள். சூரியா ஜோதிகா தம்பதிகளுக்கு 2 பிள்ளைகள் உள்ளார்கள். மகள் பெயர் தியா, மகன் பெயர் தேவ்.