தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர நடிகை கீர்த்தி சுரேஷ் முதல் முதலில் மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு 2013 ஆம் ஆண்டு ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். இவர் தமிழில் விக்ரம் பிரபு நடித்த இது என்ன மாயம் படத்தின் மூலமாக ஹீரோயின் ஆக அறிமுகமானார்.
தமிழில் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய், விக்ரம் உள்ளிட்ட பல்வேறு டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பல ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இதனிடையே கீர்த்தி சுரேஷ் விஜய் அனிருத் உள்ளிட்ட பல நபர்களுடன் காதல் கிசுகிசுக்கப்பட்டு வந்தார்.அவ்வப்போது இவரது திருமணம் குறித்த வதந்தி செய்திகளாக வெளியாகி அது வைரலாக பேசப்படும்.
ஆனால் தற்போது ஒரு தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷிற்கு திருமண ஏற்பாடுகள் தட புடலாக நடந்து வருகிறதாம். கீர்த்தி சுரேஷ் கிட்டத்தட்ட கடந்த 13 ஆண்டுகளாக ஒருவரை உருகி உருகி காதலித்து வருகிறாராம். அவர் கேரளாவை சேர்ந்த நபர் என்றும் அவர் நகைக்கடை உரிமையாளரின் மகன் என்றும் கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் வெளியில் சொல்லாமல் பொத்தி பொத்தி கீர்த்தி சுரேஷ் இந்த காதலை பாதுகாத்து வந்ததாகவும் தற்போது இருவீட்டார் சம்மதத்துடன் இந்த காதல் திருமணம் வரை நகர்ந்துள்ளதாம். இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம் கூடிய விரைவில் கீர்த்தி சுரேஷின் திருமண தகவல் வெளியாகிறதா? என்பது பற்றி…!