எல்லோருமே பிஜே பிரியங்காவை எப்போதும் கலகலப்பாக பேசியும், காமெடி செய்துக்கொண்டும், சிரித்து மக்களை மகிழ்விப்பதும் படியாக தான் பார்த்திருப்போம். ஆனால் அவரே மனமுடைந்து அழுது மிகுந்த மனவேதனையோடு எமோஷனலாக பேசி வீடியோ ஒன்றை பார்த்து பிரியங்காவா இப்படி? என நம் கண்களிலே கண்ணீர் வரவழைக்கும் அளவுக்கு தற்போது ஒரு வீடியோ வைரல் ஆகி வருகிறது.
விஜே பிரியங்கா என்று சொன்னவுடன் நம் மனதிற்குள் உடனே ஒரு சந்தோஷம் சிரிப்பு மகிழ்ச்சி என ஆட்டோமேட்டிக்காக வந்துவிடும். அந்த அளவுக்கு அவர் மக்களின் மனம் கவர்ந்த தொகுப்பாளினியாக பார்க்கப்பட்டு வருகிறார். குறிப்பாக இவர் விஜய் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களின் பேவரட் தொகுப்பாளியாக இருக்கிறார்.
சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர், பிக் பாஸ் என் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளில் இவர் பங்கேற்றுகிறார் தனது நெருங்கிய நண்பரான மா கா பா ஆனந்தின் உதவியுடன் விஜய் டிவியில் வந்து இன்று மக்களால் தவிர்க்க முடியாத விஜேவாக பார்க்கப்பட்டு வருகிறார். இவர் தனது நீண்ட நாள் நண்பரான பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்துகொண்டு பின்னர் அவரை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்.
தற்போது தனிமையில் தான் தனது அம்மா வீட்டில் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தன் தம்பி மகள் தனக்கு எவ்வளவு மிகவும் முக்கியமானவர் எவ்வளவு ஸ்பெஷல் என்பதை மிகவும் எமோஷனலாக கூறி இருக்கிறார். அவள் என்னுடைய முதல் குழந்தை, அவள் என்ன கேட்டாலும் நான் செய்வேன் என மனம் கலங்கி பேசி அழுத இந்த வீடியோ தற்போது அனைவரது கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது. இது தான் அத்தையின் உண்மையான பாசம் என பலர் கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ: