பிரித்தானியாவின் counter terror police பொலிசார் அதிரடியாக 2 பேரைக் கைதுசெய்துள்ளார்கள். அதுவும் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் மருத்துவராக(GP) வேலைபார்க்கும் கிருஸ்டபர் என்பவரின் மகன் காஷ்(29) என்பவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.
ஆழும் கான்சர்வேட்டிவ் கட்சியின் MP Alicia Kearns வின் நெருக்கமான நண்பராக இவர் இருந்துள்ளார். தான் ரிசேச் செய்வதாக கூறி, காஷ் அடிக்கடி மாராளுமன்றம் செல்வதும், MP யின் பெயரைப் பாவித்து பல சிறப்பு உரிமைகளையும் அவர் பெற்றுள்ளார். இதனூடாக பல விடையங்களை தெரிந்துகொண்டு, சீன உளவு நிறுவனத்திற்கு தகவல்களை வழங்கிக் கொண்டு இருந்துள்ளார். இதனை பிரித்தானிய புலனாய்வுப் பிரிவினர் எப்படியோ கண்டு பிடித்துவிட்டார்கள்.
பிரித்தானியாவின் வெளிநாட்டுக்கு கொள்கைகள் தொடர்பான மிக முக்கிய ஆவணங்களை இவர் எடுத்து சீன அரசுக்கு கொடுத்திருக்க வாய்ப்புகள் உள்ளதாக பிரித்தானிய உளவுத் துறை நம்புகிறது. அதாவது பிரித்தானியா எந்த நாடுகளுடன் மிக நெருங்கிய கொள்கையில் உள்ளது. பிரித்தானியா மேற்கொள்ள இருந்த திட்டங்கள். என பல விடையங்களை இவர் களவாடி சீனாவுக்கு கொடுத்து இருக்கிறார்.