ஆபாச படங்களில் நடித்து அந்த மாதிரி ரசனைக்கு ஆளாகி ரசிகர்களை வசீகரித்தவர் நடிகை ஷகிலா.
90ஸ் காலத்தில் மலையாளத்தில் மிக மோசமான படுக்கையறை காட்சிகளிலும், ஆபாச காட்சிகளிலும் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இவரது படங்களை பார்ப்பதற்கு என்றே ஒரு கோடிக்கணக்கான ரசிகர்கள் படையெடுத்து தியேட்டருக்கு செல்வார்கள்.
சகிலாவின் படம் வெளியாகிறது என்றாலே திருட்டுத்தனமாக வீட்டிலிருந்து சென்று அவரது படத்தை பார்த்துவிட்டு முகத்தை மூடிக்கொண்டு வந்த நாட்களெல்லாம் உள்ளது. 90ஸ் காலத்தில் மலையாளம் மற்றும் தமிழ் சினிமா துறையை ஆட்டிப்படைத்தவர் நடிகை ஷகிலா. அதன் பின்னர் அவரின் திரைப்படங்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
பின்னர் பட வாய்ப்புகள் இல்லாமல் கிடந்த ஷகிலா சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதனிடையே பிரபலங்களை வைத்து நேர்காணல் எடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், “தன் தம்பி தான் நடித்த அந்த மாதிரி படத்தை பார்த்து ஷாக்கான விசயத்தை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது, பாண்டிச்சேரிக்கு நண்பர்களுடன் சென்ற என் தம்பி, என்னுடைய பலான படத்தை பார்க்க நினைத்துள்ளனர். அப்போது நான் நடித்த படத்தில் என் முகத்தை பார்த்திருக்கிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் வரும் காட்சியை போன்று உண்மையில் என் வாழ்க்கையில் நடந்தது.
பார்த்தவுடன், அங்கிருந்து பைக்கில் ஓடி வந்தான். அடுத்த நாள் அவனுக்கு ஜொரம் வந்துவிட்டது. என்ன என்று நான் அவனிடம் கேட்டபோது, நீ இந்த மாதிரி படம் தான் பண்றியா என்று கேட்டான். ஆமாம், அந்த மாதிரி படம் தான், எனக்கு தெரிந்த வழி இதுதான் என்று அவனுக்கு புரியவைத்தேன். ஆனால் ரொம்ப சங்கட்டமாக இருந்தது என நடிகை ஷகீலா ஓப்பனாக கூறியிருக்கிறார்.