பிரிட்டனில் 2020ம் ஆண்டுக்குப் பின்னர், அரசு வட்டி விகிதத்தை அதிகரித்தது. அத்தோடு உக்ரைன் போர் அது இது என்று சொல்லி மக்களுக்கு சமையல் வாயு மற்றும் மின்சாரத்தை வழங்கும் கம்பெனிகள் பல மடங்காக தமது விலையை உயர்த்தினார்கள். தற்போது உச்சகட்ட விலையில் எரி வாயுவும் மின்சாரமும் உள்ளது. மக்கள் இதனைக் கட்ட முடியாமல் திண்டாடி வருகிறார்கள். ஆனால் தற்போது ஒரு டாப் சீக்கிரன் டாகுமெண்ட்(top secret documents) ஒன்றை, லண்டன் ஊடகம் வெளியிட்டுள்ளது.
இதில் சுமார் 420B பில்லியன் பவுண்டுகளை, 4 கம்பெனிகள் லாபமாகப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இது பிரித்தானிய அரசு கொண்டுள்ள கடனைக் காட்டிலும் பெரிய தொகையாக உள்ளது.
ரஷ்யா உக்ரைன் மீது தொடுத்த போரை பாவித்து, தமது விலைகளை இந்த கம்பெனிகள் அதிகரித்துள்ளார்கள். ஆனால் உண்மை அதுவல்ல என்பது தற்போது தெளிவாகப் புரிகிறது. இதனை ஒரு சாட்டாக பாவித்துள்ளார்கள் அவ்வளவு தான்.
Britishgas, EDF, Shell, BP போன்ற நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 420B பில்லியன் பவுண்டுகளை லாபமாக சம்பாதித்துள்ளதோடு, சில நிறுவனங்களின் தலைமை வேலை ஆட்களின் சம்பளம் சுமார் 8 மில்லியன் பவுண்டுகளாக உள்ளது. (அதாவது ஆண்டு ஒன்றுக்கு 800கோடி இந்திய காசு)