நித்தின் புவிராஜசிங்கம் என்பவர் 44KG எடை கூடியதால், காதலி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் வேலையும் போய் விட்டது. இருந்தாலும் ஒரு மனத் தைரியத்தில் வாழ்ந்து வந்த நிலையில். சுமார் 64 KG எடை குறைந்து கட்டழகனாக மாறிய கதையை, பிரித்தானிய MIRROR பேப்பர் வெளியிட்டுள்ளது.
வெறும் 27 வயதாகும், நித்தின் கொரோனா கால கட்டத்தில் வீட்டில் இருந்தவாறு வேலை செய்தார். வீட்டில் அதிக உணவை உட்கொண்டு வேலை செய்து வந்ததால். சுமார் 44KG எடையை அதிகமாகக் கொண்டு பெரும் உடல்வாகோடு இருந்தார். இதனைப் பார்த்த நித்தின் காதலி சொல்லமல் கொள்ளாமல் வீட்டை விட்டே ஓடிவிட்டார். பின்னர் அவருக்கு வேலையும் போய் விட்டது. இப்படி ஒரு இக்கட்டான நிலையில் நான் இருந்தேன் என்று நித்தின் தெரிவித்துள்ளார். ஆனால்…
மனம் தளராத நித்தின், தனது உருவத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று திடசங்கல்பம் பூண்டார். ஜிம் செல்ல ஆரம்பித்த நித்தின் எடையைக் குறைக்கும் உணவுகளை உண்ண ஆரம்பித்தார். இதனால் 64KG வரை குறைந்து, ஆண் அழகனாக மாறிய இவர். தற்போது ஜிம் பயிற்றுவிப்பாளராக மாறி விட்டார். அது தான் மிக மிக ஆச்சரியமான விடையம். எப்படி இருந்த நான் இப்படி ஆகீட்டேன் என்று சொல்வார்களே அது இது தான்…