தனுஷ் அடுத்து தனது 50 ஆவது படத்தை தானே இயக்கி மின்னல் வேகத்தில் ஷூட்டிங்கை முடித்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தில் தனுஷோடு எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அமலா பால் மற்றும் செல்வராகவன் உள்ளிட்டோர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த படத்துக்காக மொட்டை அடித்து கெட்டப்பை மாற்றிய தனுஷ் மொத்த காட்சிகளையும் 110 நாட்களில் முடித்தார்.
இந்த படத்தின் பின் தயாரிப்புப் பணிகள் இப்போது நடந்து வரும் நிலையில் இந்த படத்தை ஏப்ரல் 12 ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தின் தலைப்பாக ‘ராயன்’ என்று வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடக்கும் நிலையில் அப்போது படத்தை ரிலீஸ் செய்யவேண்டாம் என படக்குழு இப்போது முடிவெடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.இதனால் அந்த படம் சில வாரங்கள் தள்ளிப் போகலாம் என சொல்லப்படுகிறது. இந்த படம் மற்றுமின்றி ஏப்ரலில் ரிலீஸ் ஆக திட்டமிருந்த தங்கலான் உள்ளிட்ட பல படங்கள் தங்கள் ரிலீஸ் திட்டத்தை மாற்ற ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.