வடக்கில், தமிழ் வேட்ப்பாளர் அரியநேந்திரனுக்கு அதிக அளவில் வாக்குப் போட்ட இடங்களாக பின் வரும் பகுதிகளே உள்ளது, யாழ்ப்பாணம், கைதடி, மானிப்பாய், பருத்தித்துறை, உடுப்பிட்டி, வட்டுக்கோட்டை மற்றும் நல்லூர் ஆகிய பகுதி மக்களே, இந்த மக்கள் , சஜித் மற்றும் ரணிலை முழுமையாகப் புறக்கணித்து அரியநேந்திரனுக்கு தமது வாக்குகளைப் போட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. முல்லைத் தீவில் சஜித்துக்கு 28,301 ஆயிரம் வாக்குகளும், கிளிநொச்சியில் சஜித்திக்கு 30,571 வாக்குகளும், மன்னாரில் 28,500 வாக்குகள் சஜித்துக்கும், சாவகச்சேரியில் 10,956 வாக்குகள் சஜித்துக்கும், கோப்பாயில் 12,299 வாக்குகள் சஜித்துக்கும், காங்கேசன் துறையில் 8,500 வாக்குகள் சஜித்துக்கு தமிழர்கள் போட்டுள்ளார்கள்.
மேலும் கிழக்கை எடுத்துக் கொண்டால், கல் குடாவில் 45,000 பேர் சஜித்துக்கும், மட்டக்களப்பில் 64,000 பேர் சஜித்திற்கும், மூதூரில் 58,000 பேர் சஜித்திற்கும், திருகோணமலையில் 31,000 பேர் சஜித்திற்கும், தமிழர்கள் மற்றும் தமிழ் முஸ்லீம்கள் தமது வாக்குகளை சஜிதிற்கு போட்டுள்ளார்கள். தமிழர் தாயகத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், கிழக்கு மாகாணமும், வடக்கில் சில மாகாணங்களும் முற்றாக சஜித் பிரேமதாசாவை ஆதரித்துள்ளார்கள் என்பது பெரும் துன்பமான செய்தி. இவர்கள் வாக்குகள் அரிய நேந்திரனுக்குச் சென்று இருந்தால், சிலவேளைகலில் அரியநேந்திரன் ரணிலை முந்தி 3ம் நிலையில் இருந்திருப்பார் என்று கூறலாம்.
ஆனால் தமிழர்களுக்கு இடையே காணப்படும் இந்தப் பிரிவு என்பது, ஆரோக்கியமான ஒரு விடையமே அல்ல. கொழும்பில் வசிக்கும் தமிழர்கள் பலர் அரியநேந்திரனுக்கு வாக்குகளைப் போட்டுள்ளார்கள், விருப்பு வாக்காக அவர்கள் சஜித்தை தெரிவு செய்துள்ளார்கள் என்பது ஆரோக்கியமான செய்தி.