திடீரென அனுரா பின்னடைவை சந்திக்க ஆரம்பித்துள்ளார் உண்மை நிலவரம் என்ன ?

திடீரென அனுரா பின்னடைவை சந்திக்க ஆரம்பித்துள்ளார் உண்மை நிலவரம் என்ன ?

தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டு இருக்கும் இந்தவேளையில், ஆரம்பம் முதல் அனுரா திடமான ஒரு நிலையில் இருந்து வந்தார். அவர் 42% விகிதத்திலும் சஜித் 32% விகிதத்திலும் இருந்து வந்தார். ஆனால் திடீரென, அனுரா சில இடங்களில் தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சிங்களப் பகுதிகளில், அனுரா பின்னடைவைச் சந்திப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவரது நிலை தற்போது 39% விகிதமாகவும் சஜித் நிலை சற்று முன்னேறி 34% விகிதமாகவும் மாறியுள்ளது.

முதலில் அனுரா முன்னேறுவது போன்ற தோற்றம் இருந்தாலும், போகப் போக சிங்கள பகுதிகளில் சஜித் முன்னேறுவது போன்ற தோற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. இது என்ன மாயம் என்று தெரியவில்லை. குறிப்பாக அமெரிக்க, இந்தியா தொடக்கம் பல உலக நாடுகள், சஜித் ஜனாதிபதியாக வருவதையே விரும்புகிறது என்பது வெளிப்படையான உண்மை. இந்த மாறுதலுக்கு என்ன காரணம் என்பது புரியவில்லை. இருப்பினும் விருப்பு வாக்குகள் எண்ணப்படும் நிலை வரலாம்.

இலங்கை மொத்தமாக அரியநேந்திரன்(தமிழ்ப் பொது வேட்ப்பாளர்) 4வது நிலையில் உள்ளார். என்பதும் குறிப்பிடத்தக்க விடையம். அவர் நமால் ராஜபக்ஷவை விட முன் நிலையில் உள்ளார்.