நாங்கள் தற்போது TV ல் பார்ப்பதும் ரேடியோவில் கேட்ப்பதும், சுமார் 3 அல்லது 4 மணி நேரங்களுக்கு முந்தைய முடிவுகளைத் தான். இலங்கை Electoral(தேர்தல் ஆணைய) நிலவரப்படி, அதன் உள்ளக தகவலின் அடிப்படையில், அனுரா வெற்றி பெற்றுள்ளதாக இன்னும் சில மணி நேரத்தில் தேர்தல் ஆணையாளர் அறிவிக்க உள்ளார் என்ற தகவல் அதிர்வு இணையத்திற்கு கசிந்துள்ளது. இது இந்திய காய் நகர்த்தலுக்கும், அரசியலுக்கும் கிடைத்த பெரும் தோல்வியாக கருதப்படுகிறது. காரணம் சீனா இலங்கையில் வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது என்று தான் கூறவேண்டும்.
கடைசி 4 வாரத்தில் மட்டும், சீன அரசு அனுராவுக்கு சுமார் 30$ மில்லியன் அமெரிக்க டாலர்களை செலவு செய்துள்ளதகா கூறப்படுகிறது. சீன அரசு கொடுத்த பெரும் தொகைப் பணத்தை அனுரா, தனது தேர்தல் செலவுக்கு சரியான முறையில் பாவித்துள்ளார். அனுரா பேசிய எல்லா மேடைகளையும் கவனித்துப் பார்த்தால் அங்கே 2 தொடக்கம் 3 குளிரூட்டிகள்(AC) , மிகவும் நேர்த்தியான மைக் சிஸ்டம், பெரிய திரை(Big LED screen). அதுபோக மாநாட்டுக்கு வந்தவர்களுக்கு உணவு, அவர்களில் வேறு மாவட்டத்தில் இருந்து வந்தவர்கள் தங்க ஹோட்டல், என்று சகல வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது. இந்த JVPயிடம் எப்படி இந்த அளவு பணம் புரண்டது ? சீனா கொடுக்கவில்லை என்றால் வாய்ப்பே இல்லை.
இதேவேளை இந்திய அரசு வாயால் வடை சுட்டுக்கொண்டு இருந்தது. நாம் இந்த தேர்தலை உற்றுநொக்குகிறோம் என்ற வார்த்தையை தவிர, வேறு எதனையும் இந்திய அரசு செய்யவில்லை. இந்தியா பகிரங்கமாக சஜித்தை ஆதரித்தாலும். இந்திய அரசு தென் இலங்கையில் இறங்கி அவர் வெற்றிக்கு எந்த வேலையையும் செய்யவில்லை. ஆனால் சீனா இந்த விடையத்தில் கில்லாடிகள். இலங்கை ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பதில் சீனா மிகுந்த அக்கறை கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் மீடியாவில் எந்த ஒரு செய்தியையும் வெளியிடவில்லை. மாறாக களத்தில் இறங்கி வேலை பார்த்துள்ளார்கள்.
அனுரா இலங்கை ஜனாதிபதி ஆனால், சீன சார்புக் கொள்கையை கடைப்பிடிப்பார் என்றே எதிர்பார்கலாம். இது இவ்வாறு இருக்க நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலிலும் , அனுராவின் JVP கட்சி வென்று ஆட்சியை அமைக்கும் என்று நம்பப் படுகிறது. ஆனால் தமிழர்கள் பலர் சஜித்திற்கு வாக்குப் போட்டு அனுராவின் அதிருப்த்தியை சம்பாதித்தது தான் மிச்சம். அனுரா தேர்தலுக்கு முன்னதாக கடைசியாக நல்லூர் கோவில் சென்று வழிபட்டுச் சென்றார். முருகன் மீது அவருக்கு அசாதாரண நம்பிக்கை இருப்பதாக, அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள். அவருக்கு கடவுள் பக்த்தி இல்லை என்று கூறுவது எல்லாம் உண்மைக்கு புறம்பான செய்தி என்று அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள்.