தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தலைவரும், நடிகருமான விஜய் அவர்கள் இன்று பேசிய பேச்சு, தமிழ் நாடு எங்கும் அணல் பறக்கும் விதமாக அமைந்துள்ளது. அன்னல் அம்பேத்கர் பற்றிய நூல் வெளியீடு ஒன்றை, விகடன் குழுமம் இன்று(07) நடத்தி இருந்தது. தாழ்த்தப்பட்ட தலித் இனத்தில் பிறந்து, பின்னர் அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் சட்டம் பயன்று, இந்திட அரசியல் அமைப்பு சட்டங்கள் உருவாக ஏதுவாக இருந்தவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள். இந்த நூல் வெளியீட்டு விழாவில், அம்பேத்கர் பேரன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இதேவேளை
பிரதம விருந்தினராக விஜய் அவர்கள் வந்திருந்தார். அவர் அந்த மேடையில் பேசிய பேச்சு அணல் பறக்கும் விதத்தில் அமைந்திருந்தது. அண்ணல் அம்பேத்கர் பெயரால் கட்சி நடத்தி, இன்று தமிழ் நாட்டில் உள்ள தலித் தலைவர்களில் மிக முக்கிய இடத்தில் இருப்பவர் விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள். அவர் இன்று இந்த நிகழ்வில் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவர் வரவில்லை. இதனை விஜய் அவர்கள் மிகவும் சூட்சுமான முறையில், மேடையில் பேசி, தி.மு.க கொடுத்த அழுத்தம் காரணமாகவே திருமா வரவில்லை என்பதனை போட்டு உடைத்துள்ளார்.
அது போக தொல் திருமா வரவில்லை என்றால் என்ன ? அவரது மனம் இங்கே தான் இன்று முழுக்க இருக்கப் போகிறது என்று கூறி, தனக்கும் திருமாவுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதனை சற்று வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார். விஜய் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்த கால கட்டத்தில், தொல் திருமா அவரது கட்சியில் இணையக் கூடும் என்ற பேச்சு அடி பட்டு வந்தது. இதற்காக சிலர் அவரிடம் சென்று சமரசம் பேசியவேளை. தொல் திருமா பின்னர் பார்போம் என்று கூறினாரே தவிர. முற்றாக புறக்கணிக்கவே இல்லை. இதனால் தேர்தல் நெருங்கி வரும் சயம், பார்த்து தி.மு.கா விடம் அதிக ஆசனங்களை கேட்ப்பது. அப்படி அவர்கள் தந்தால், கூட்டணியில் இருப்பது. இல்லையென்றால் விஜய் கட்சியில் இணைந்து கொள்வது என்ற முடிவில் திருமா இருக்கிறார் என்று கூறப்படுகிறது. இது விஜய்க்கு கிடைத்த முதல் வெற்றி !
அதாவது திருமா அவர்கள், விஜய் கட்சியில் இணைந்தால். தமிழக கரையோரக் கிராமங்களில் உள்ள வாக்குகள் அனைத்தும் இந்தக் கூட்டணிக்கே குவியும். இது விஜய்க்கு மிகவும் சாதகமான ஒரு சூழ் நிலையை தோற்றுவிக்கும். தற்போதைய நிலவரப்படி, தேர்தல் நெருங்கும் நேரத்தில்(2026) தொல் திருமா விஜயின் கட்சியில் இணைவார் என்று கூறப்படுகிறது. இப்படியே தி.மு.க கூட்டணியை விஜய் கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கப் போகிறார் என்று, அரசியல் வல்லுனர்கள் எதிர்வு கூறுகிறார்கள். விஜய் நடித்த “”சர்க்கார்”” படம் போல தி.மு.க என்கிற BRAND அழியப் போகிறது. இது எப்படி நடக்கப் போகிறது என்பது விஜய்க்கு மட்டும் தான் வெளிச்சம் ! (கீழே வீடியோ இணைப்பு.)