லண்டனில் அடிக்கிற காற்று மரங்களையே புரட்டிப் போடுகிறது- கார் ஓட்டுபவர்கள் கவனம் !

லண்டனில் அடிக்கிற காற்று மரங்களையே புரட்டிப் போடுகிறது- கார் ஓட்டுபவர்கள் கவனம் !

லண்டன் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில், இன்றும் நாளையும் பலத்த காற்று வீசும் என்றும். அத்துடன் மழையும் இருக்கும் என்று பிரித்தானிய வாநிலை ஆயுவு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே பெரிய மரம் ஒன்று சரிந்ததில், 40 வயது ஆங்கிலேயர் ஒருவர் இறந்துவிட்டார். இதேவேளை M25 நெடுஞ்சாலையில் பலத்த காற்று வீசுவதால் சிறிய ரக கார்களை ஓட்டும், நபர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.

மணிக்கு 80 தொடக்கம் 90 மைல் வேகத்தில் கடும் காற்று வீசி வருகிறது. கடும் மழை இன்று இரவு ஆரம்பிக்க வாய்ப்புகள் உள்ளது. இதனால் வீதிகள் ஈரப்பத்தோடு இருப்பது மட்டும் அல்லாது. காற்றின் வேகத்தால் பல விபத்துகள் தோன்ற வாய்ப்புகள் உள்ளது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.