லண்டனில் புயல் காற்று அடித்துக் கொண்டு இருக்கிறது. இதனை விட கடும் குளில் மற்றும் மழை பெய்துகொண்டு இருக்கும் இன் நேரத்திலும், நடிகர் தனுஷை பார்க்க மக்கள் திரண்டு உள்ளார்கள். நம்பவே முடியவில்லை. ஆனால் உண்மை. தாடி மீசை எல்லாவற்றையும் எடுத்து விட்டு, பாய் கடையில் வேலை செய்யும், ஒரு சாதாரண ஆள் போல தனுஷ் காட்சி தருகிறார். சில நண்பர்கள் கூறுகிறார்கள், அவர் தனுஷ் என்று என்னால் நம்பவே முயவில்லை என்று.
இதனை விட ஆச்சரியம் என்னவென்றால், லண்டனில் உள்ள சக்கரை வியாதி நோயாளர்களுக்கு பணம் சேர்க்க இந்த புயல் காற்றில் தனுஷ் அவர்கள் வீதியால் நடந்து சென்று, அருகே உள்ள சரவண பவான் சைவ உணவு விடுதியில் மக்களோடு மக்களாக அமர்ந்து உணவு உண்கிறார். இதனூடாக திரட்டப்படும் பெரும் நிதி, சக்கரை நோய் வியாதியால் அல்லலுறும் வெள்ளை இன மக்களுக்கு செல்லும் என்று, கீத் வாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். சர்சைக்குரிய முன் நாள் MP கீத் வாஸ் இதற்கு ஒரு ஏற்பாட்டாளராக இருக்கிறார்.
நடந்து முடிந்த பிரிட்டன் பாராளுமன்ற தேர்தலில், கீத் வாஸ் அவர்கள் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் லெஸ்டர் பகுதியில் போட்டியிட்டு இருந்த நிலையில், இது போலவே ஷில்பா செஷ்ட்டியை லெஸ்டர் அழைத்து வந்து, வாக்குச் சேகரிக்க முயற்ச்சி செய்தார். ஆனால் அது பலன் தரவில்லை. தற்போது தனுஷ் அவர்களை வைத்து இந்த நல்ல காரியத்தை செய்கிறார். அவருக்கு லண்டன் தமிழர்கள் பெரும் ஆதரவாக இருப்பதை, கண் கூடாகப் பார்க முடிகிறது.