உக்ரைனை அதிரவைத்த ரஷ்யா.. போரில் முதல் முறை! “அரக்கன்” ஐசிபிஎம் ஏவுகணையின் பவர் என்ன தெரியுமா?

உக்ரைனை அதிரவைத்த ரஷ்யா.. போரில் முதல் முறை! “அரக்கன்” ஐசிபிஎம் ஏவுகணையின் பவர் என்ன தெரியுமா?

வாஷிங்டன்: உக்ரைன் மீது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை ரஷ்யா ஏவியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் போர் முனையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது இதுவே முதல் தடவையாகும். ஐசிபிஎம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் எனப்படும் ஏவுகணை என்றால் என்ன? எவ்வளவு தூரம் சென்று தாக்கும்? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்.

கடந்த 2022 பிப்ரவரி மாதம் ரஷ்யா உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது 1000 நாட்களையும் கடந்து போர் நீடித்து வருகிறது. ரஷ்யா மீது தாக்குதல் நடத்த உக்ரைனுக்கு அமெரிக்கா உட்பட மேற்​கத்திய நாடுகள் ராணுவ உதவி வழங்கி வந்தன. நீண்ட தூரம் சென்று இலக்​குகளை துல்லியமாக தாக்​கும் ஏவுகணைகளை உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்கி இருந்தது.

எனினும், இந்த ஏவுகணை​களைப் பயன்​படுத்த கட்டுப்​பாடுகள் விதிக்​கப்​பட்​டிருந்தன. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்​காலம் முடிவடைய உள்ள நிலையில், தாங்கள் வழங்கிய நீண்ட தூரம் சென்று தாக்​கும் ஏவுகணைகளை பயன்​படுத்த உக்ரைனுக்கு பைடன் அனுமதி வழங்​கினார். நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு ஆர்வம் காட்டிய உக்ரைன் மீது கடந்த 2022 ஆம் ஆண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியது. உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் ஆயிரம் நாட்களை கடந்து நீடித்து வருகிறது. ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது போர் பதற்றமானது அதிகரித்துள்ளது. இதற்கு நீண்ட தூரம் சென்று தாக்க கூடிய ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தலாம் என்று அமெரிக்கா அனுமதி வழங்கியதே காரணம். அமெரிக்கா அனுமதி கொடுத்ததும், ரஷ்ய அதிபர் புதின், அணு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி கொடுத்தார்.

இதற்கிடையே, நீண்டதூரம் பாய்ந்து சென்று தாக்கும் ஏவுகணை மூலம் உக்ரைன் நேற்று முன்தினம் இரவு தாக்குதல் நடத்தியது. இந்த ஏவுகணை பிரியான்ஸ்க் நகரில் உள்ள ஆயுதக் கிடங்கை தாக்கியதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரைனின் இந்த தாக்குதலுக்கு கடுமையான பதிலடியை ரஷ்யா கொடுக்கும் என சொல்லப்பட்ட நிலையில், இன்று ஐசிபிஎம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயக் கூடிய சக்தி வாய்ந்த ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் போர் முனையில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது இதுவே முதல் தடவையாகும். ஐசிபிஎம் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் எனப்படும் ஏவுகணை என்றால் என்ன? என்பது பற்றி இங்கே பார்க்கலாம்..

ஐசிபிஎம் எனப்படும் கண்டம் intercontinental ballistic missile என்பது 5,800 கிலோ மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டது ஆகும். RS-26 Rubezh என்ற ஏவுகணை உக்ரைனின் டினிப்ரோ நகரத்தில் உள்ள முக்கியமான உள்கட்டமைப்புகளை குறிவைத்து நடத்தப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களையும் சுமந்து சென்ற இந்த ஏவுகணையால் தாக்குதல் நடத்த முடியும். ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவு முதல் 5 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட பல்வேறு வகையான ஐசிபிஎம் ஏவுகணைகள் உள்ளன. இந்த நவீன ஏவுகணையை நகர்த்தக்கூடிய (மொபைல்) ஏவுதளத்தில் இருந்து கூட ஏவ முடியும். திரவ எரிபொருள் அல்லது திட எரிபொருளை பயன்படுத்த முடியும். திரவ எரிபொருளால் செல்லும் ஐசிபிஎம் ஏவுகணையை விட திட எரிபொருளில் இயங்கும் ஏவுகணை மிகவும் ஆபத்தானது. ஐசிபிஎம் ராக்கெட் முதல் முறையாக 1957 ஆம் ஆண்டு சோவியத் யூனியனால், அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பிறகு 1959 ஆம் ஆண்டு அமெரிக்கா கொண்டு வந்தது.