இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வடமேற்கில் உள்ள பழங்குடியின பகுதியில் பயணிகள் வாகனத்தை குறிவைத்து, துப்பாக்கி ஏந்திய நபர்கள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 42 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 29 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
பாகிஸ்தானில் வடமேற்கில் உள்ள பழங்குடியின மாவட்டம் குர்ரம். இங்குள்ள இடத்தில் இருந்து பெஷாவருக்க சென்று கொண்டிருந்த பயணிகள் வாகனம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 38 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
40 வாகனங்கள் போலீஸ் பாதுகாப்புடன் சென்று கொண்டிருந்த நிலையில், இரண்டு வாகனங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டில் குழந்தைகள், பெண்கள் உள்பட 38 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். பலர் படுகாயம் அடைந்து இருப்பதால் பலி எண்ணிக்கை அஞ்சக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தான் அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உடனடியாக இச்சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கியுள்ளது. பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளர்.
தற்போது தாக்குதல் நடைபெற்றுள்ள இடம் நீண்ட காலமாகவே பதற்றம் நீறைந்த இடமாக உள்ளது. இஸ்லாமியர்களில் இரு பிரிவினர் இடையே நீண்ட காலமாக நிலபிரச்சினை நீடித்து வருகீறது. கடந்த அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற மோதலில் 16 பேர் கொல்லப்பட்டு இருந்தனர்.