Source : New Pay-Per-Mile Car Tax Could Cost Drivers £1,080 for ‘Average’ Mileage
தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள லேபர் அரசானது, புதுச் சட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த உள்ளது. அதாவது பல ஆண்டுகளாக கார் வைத்திருக்கும் ஓட்டுனர்கள், Road-Tax கட்டி வருகிறார்கள். இது வாகனங்களின் எடை மற்றும் பருமனை பொறுத்து மாறுபடும். ஆனால் தற்போது ஆட்சியில் உள்ள லேபர் அரசானது, அதனை விட்டு விட்டு, வாகனம் எவ்வளவு KM ஓடுகிறதோ, அதற்கு வரி என்ற புது சிஸ்டத்தை கொண்டு வர உள்ளார்கள். அதாவது….
ஒரு 1KM க்கு 15P பென்ஸ் என்ற, விகிதத்தில் அறவிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சராசரியாக ஒரு கார் உரிமையாளர் வருடம் ஒன்றுக்கு 7,000 தொடக்கம் 8,000KM வரை ஓடுவார். அவர் தற்போது £350 தொடக்கம் £400 பவுண்டுகளையே ஒரு ஆண்டுக்கு Road-Tax கட்டி வருகிறார். ஆனால் லேபர் அரசு கொண்டு வரும் இந்த புது திட்டத்தால் குறித்த நபர், ஆண்டு ஒன்றுக்கு £1,080 பவுண்டுகள் வரை செலுத்த நேரிடும். இதனை மக்கள் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளார்கள்.
தற்போது மின்சார கார்களுக்கு Road-Tax கிடையாது. இதனால் பல மில்லியன் பவுண்டுகளை அரசு இழந்து வருகிறது. இதனை ஈடு கட்டவே இந்த திட்டம் என்று கூறப்படுகிறது. இதனூடாக மின்சார கார் என்றாலும் சரி, பெற்றோல் வாகனம் என்றாலும் சரி, வரி கட்டியே ஆகவேண்டும் என்ற நிலை தோன்றவுள்ளது. பிரித்தானியாவில் என்றும் இல்லாதவாறு, விலைவாசி கூடியுள்ளது, பெற்றோல் விலை அதிகரிப்பு, GAS மற்றும் மின்சார விலை அதிகரிப்பு, மேலும் சொல்லப் போனால் , வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. மக்கள் பிரிட்டனில் வாழவே முடியாது என்ற நிலை தோன்றியுள்ளது. இதில் இந்த Road-Tax வேறு மக்கள் பணத்தை கொள்ளையடிப்பதாக அமைகிறது.
இது எந்த வருடம் அமுலுக்கு வரும் என்பதனைச் சொல்ல முடியாது. காரணம் பிரித்தானிய வீதிகள் அனைத்திலும் பிரத்தியேக கமராக்களை பொருத்தவேண்டும். அவை நம்பர் பிளேட்டை பதிவு செய்து, ஒரு வாகனம் எத்தனை KM ஓடியுள்ளது என்று கணக்கிட்டு, DVLA க்கு அறிவிக்க வேண்டும். அப்படி என்றாலே இது சாத்தியம். அதனால் இந்த திட்டம் அமுலுக்கு வர இன்னும் சில வருடங்கள் பிடிக்கலாம். இருப்பினும் இந்த திட்டம் ஒரு மிக மோசமான திட்டம் என்று ஏற்கனவே மீடியாக்கள் சாட ஆரம்பித்து விட்டார்கள்.