கடந்த 3 தினங்களுக்கு முன்னர், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பில் இருந்த பலரது பேஜர்கள் வெடித்ததில் பலர் காயமடைந்தார்கள். இதில் சுமார் 15 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இதில் நோவே நாட்டைச் சேர்ந்த இந்திய வம்சாழி நபரான ரின்சன் யோஷ் என்பவர் சம்பந்தப்பட்டுள்ளதாக, பிரித்தானிய MI-6 பிரிவு இன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பல்கேரியா நாட்டில் இயங்கி வந்த ஒரு, TECH கம்பெனியின் உரிமையாளர் தான் இந்த ரின்சன் யோஷ். குறித்த நிறுவனத்திற்கு இஸ்ரேல் மொசாட் படைகள், சுமார் £ 1.3 மில்லியன் பவுண்டுகளைக் கொடுத்துள்ளார்கள். இதனை அடுத்து ஹங்கேரியில் இயங்கி வந்த நிறுவனம் ஒன்றின் ஊடாக, யோஷ் கொடுத்த தொழில் நுட்ப்ப வசதிகள் பாவிக்கப்பட்டு, இந்த பேஜர்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. லெபனானில் இந்த பேஜர்கள் வெடித்த நாளில் இருந்து யோஷ் தலைமறைவாகியுள்ளதாக நோர்வே மற்றும் பிரித்தானிய மீடியாக்கள் அறிவித்துள்ளது.
2015ம் ஆண்டு தொடக்கம், நோர்வே தலை நகர் ஓசிலோவில் யோஷ் பணி புரிந்து வந்துள்ளார். மேலும் பிரித்தானியாவில் உள்ள தொழில் நுட்ப்ப மாணவி ஒருவரும் இந்த சதித் திட்டத்தில் சூத்திரதாரியாக இருப்பதாகவும் பிரித்தானிய உளவுத் துறை நம்புகிறது. Arcidiacono-Barsony என்ற பிரித்தானியப் பெண்ணை உளவுத்துறையினர் விசாரணை செய்து வருகிறார்கள்.
உலகில் எந்த ஒரு இலத்திரனியல் பொருட்களும் பாதுகாப்பு அற்றவை என்று இந்த தாக்குதல் ஊடாக இஸ்ரேல் உலகிற்கு காட்டியுள்ளது. இது ஒரு புது போர் முனையை திறந்துள்ளது. இனி எவர் வேண்டும் என்றாலும் எந்தப் பொருளிலும் குண்டை வைக்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. மேலும் சற்று முன்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில், இஸ்ரேல் தரை மார்கமாக லெபனான் நாட்டுக்கு உள்ளே செல்ல முற்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.