அமெரிக்காவில் மட்டும் பல மில்லியன் ரசிகர்களைக் கொண்ட, பாடகி டெயிலர் ஸ்விப்ட் தனது இன்ஸ்டாகிராமில் கமலா ஹரிசுக்கு ஆதரவாக இருப்பதாக தகவல் வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அவரது பல மில்லியன் ரசிகர்கள், இதனை ஆதரித்துள்ளார்கள். இந்த விடையம் டொனால் ரம்புக்கு பெரும் எரிச்சலை கிளப்பியுள்ளது. தற்போது தோல்வியின் விழிம்பில் உள்ள ரம்புக்கு மேலும் ஒரு இடி விழுந்துள்ளது.
அது தான் நேற்று நடந்த TV நிகழ்வு. இதில் உலகப் புகழ் நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஓப்பிரா, கமலா ஹரிசை பேட்டி கண்டுள்ளார். மிகவும் பரபரப்பாக இந்த TV நிகழ்ச்சி நடைபெற்றமை, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனால் கமலா ஹரிசுக்கு மேலும் ஆதரவு பெருகியுள்ளதாக இன்றைய கருத்துக் கணிப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே தன்னை எதிர்த்து போட்டியிடும் டொனால் ரம்பை விட , கமலா ஹரிஸ் சற்று மேலே உள்ளார்.
ஆனால் டெயிலர் ஸ்விப்ட் மற்றும் ஓபிரா ஆகியோரின் ஆதரவுக்கு பின்னர் அவரது செல்வாக்கு சற்று முன்னேறி, ஒரு நிலையான இடத்தைப் பிடித்துள்ளது என்று தான் கூறவேண்டும்.