தளபதி பாட்டு போட்டதும் சினேகாவுக்கு கால் தரைல நிக்கல.. வைரல் வீடியோ!

தளபதி பாட்டு போட்டதும் சினேகாவுக்கு கால் தரைல நிக்கல.. வைரல் வீடியோ!

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

இரட்டை வேடத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். அவர்களுடன். லைலா, பிரசாந்த் , பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் தற்போது கோட் பிரஸ்மீட்டில் கலந்து கொண்ட லைலா, சினேகா ,பிரேம்ஜி அமரன் , வைபவ், நடிகர் பிரசாந்த் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் மாஸ்டர் பாடலுக்கு மேடையில் நடனம் ஆடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரல் ஆக்கி வருகிறது அதில் தளபதி பாட்டு போட்ட உடனே சினேகாவுக்கு கால் தரையிலே நிக்கல என சினேகாவின் நடனத்தை பார்த்து ரசிகர்கள் ரசித்து தள்ளியிருக்கிறார்கள்.

https://www.instagram.com/reel/C_cw6ZasGpy/?utm_source=ig_web_copy_link

கோட் , தளபதி விஜய் , ஸ்னேகா டான்ஸ் , Goat movie