உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, பெரும் சூதாட்டம் ஒன்றில் இறங்கி இருக்கிறார். இது பலிக்குமா இல்லை அவர்களையே அழிக்குமா என்பது தான் பெரும் புதிராக உள்ளது. உக்ரைனின் பெரும் படை அணி ஒன்று, ரஷ்யாவுக்குள் ஊடுருவி, சுமார் 200 மைல் வரை சென்றுள்ளது. அத்துடன் அந்த உக்ரைன் படையணி, ரஷ்யாவின் கேர்ஷ் என்னும் பிரதேசத்தை கைப்பற்றி, அங்கே நிலை கொண்டுள்ளார்கள். ஆனால் உக்ரைன் நாட்டின் கிழக்குப் பகுதியில் பல இடங்களை ரஷ்யா கைப்பற்றி முன்னேறி வருகிறது. காரணம்…
ரஷ்யப் படைகளை தடுத்து நிறுத்தவேண்டிய, உக்ரைன் படையணி ரஷ்யாவில் கேர்ஷ் நகரில் நிலைகொண்டுள்ளது. உக்ரைன் அதிபர் திட்டம் என்னவென்றால், ரஷ்யாவின் கேர்ஷ் நகரில் உக்ரைன் படைகள் நுளைந்தால், ரஷ்யா தனது படைகளை கேர்ஷ் நகர் நோக்கி நகர்த்தும் என்று எதிர்பார்த்தார். ஆனால் ரஷ்யா அப்படிச் செய்யவில்லை. மாறாக, ரஷ்யா உக்ரைன் நோக்கி முன்னேறி வருகிறது. கேர்ஷ் நகரில் ரஷ்யா எந்த ஒரு தாக்குதலையும் நடத்தவே இல்லை. இதனால் சர்வதேசமே குழம்பிய நிலையில் உள்ளது. காரணம் ..
இந்த திட்டத்தை வகுத்துக் கொடுத்ததே, அமெரிக்கா தான். ஆனால் புட்டின் வேறு விதமாக காய் நகர்த்துகிறார். ரஷ்யாவுக்கு உள்ளே ஊடுருவிச் செல்லச் செல்ல, உக்ரைன் படைக்கு ஆபத்து அதிகமாகிக்கொண்டு தான் இருக்கப் போகிறது. ஆயுத போக்கு வரத்தை ரஷ்யா ராணுவம் துண்டித்தால், உள்ளே இருக்கும் உக்ரைன் படைகள் அழிவைச் சந்திக்கவேண்டி இருக்கும். இதேவேளை உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை ரஷ்யா பலப்படுத்தி வருகிறது. இதனால் உக்ரைன் அதிபர் ஆடும் இந்தச் சூதாட்டம் எங்கே போய் முடியப் போகிறது என்பது தெரியவில்லை.
ரஷ்யா ஒரு மிகப் பெரிய தேசம், எனவே ரஷ்யா நேட்டோ நாடுகளை மிரட்ட என வைத்திருக்கும் துருப்புகளை கேர்ஷ் நகரில் இறக்கி உக்ரைன் ராணுவத்தை பின்வாங்கச் செய்ய முடியும். ஆனால் உக்ரைன் இழந்த பகுதிகளை, எப்படி மீண்டும் மீட்டு எடுக்கும் ? இழந்தால் இழந்தது தான். இப்படியான ஒரு சூழ் நிலை உருவாகியுள்ளது.