BREAKING NEWS :::: சற்று முன்னர் அணு குண்டு வாகனத்தை கிரீமியாவுக்கு நகர்த்திய ரஷ்யா… EU நாடுகள் அனைத்தும் அலேட் !

BREAKING NEWS :::: சற்று முன்னர் அணு குண்டு வாகனத்தை கிரீமியாவுக்கு நகர்த்திய ரஷ்யா… EU நாடுகள் அனைத்தும் அலேட் !

Nuclear threat looms: Russian nuclear unit spotted Just now in occupied Crimea

சற்று முன்னர், tactical nuclear என்று அழைக்கப்படும் மட்டுப்படுத்தப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் அணு குண்டு ஏவும் மோபைல் தளத்தை ரஷ்யா கிரீமியா பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது. இதனை உக்ரைன் நாட்டின் வேபுப் படை பிரிவு நேரில் பார்த்து, உக்ரைன் தலை நகர் கிவ் வுக்கு அறிவித்துள்ளதாக சற்று முன்னர் தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யா 2014ம் ஆண்டு உக்ரைன் நாட்டின் கிரீமியா என்ற மாநிலத்தை கைப்பற்றி இருந்தது. கடந்த 10 வருடங்களாக அங்கே ரஷ்யப் படைகள் நிலைகொண்டு இருக்கிறது. குறித்த கிரீமியா பகுதியில் இன்று ரஷ்யாவின் அணு குண்டை கொண்டு சென்று, ஏவக்கூடிய மோபைல் தளம், நகர்ந்து செல்வதை உக்ரைன் வேவுப் படைப் பிரிவு கண்ணால் கண்டுள்ள நிலையில், தற்போது இந்தச் செய்தி உலகையே உலுக்கியுள்ளதோடு, ஐரோப்பிய நாடுகள் அனைத்தும் அலேட் ஆகியுள்ளது.

போலந்து நாட்டில் உள்ள நேட்டோ படைத் தளத்திற்கு இந்தச் செய்தியை உக்ரைன் தற்போது அறிவித்துள்ளது. இது நாள் வரை இந்த அணு குண்டை ஏவும் தளம் கிரிமியாவுக்கு கொண்டு செல்லப்படவில்லை. உக்ரைன் நாட்டின் ஒரு பகுதியான கிரீமியாவில் வைத்து இதனை ஏவினால், உக்ரைனால் எதுவும் செய்ய முடியாது. அதனைவிட கிரீமியா மிகவும் அருகில் உள்ளது. இதனால் அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் இந்தப் பதற்றமான செய்தி வெளியாகியுள்ளது.

என்ன நடக்கப் போகிறது என்பது தெரியவில்லை. அத்தோடு அதிபர் புட்டின் அணு குண்டு ஏவுகணைத் தளத்தை ஏன் , கிரீமியாவுக்கு நகர்த்தியுள்ளார் என்பதும் பெரும் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.