Russia has threatened to attack British targets if Ukraine uses UK-supplied weapons amid rising tensions and the recent arrest of a British man charged with spying for Russia. Here’s the full story in TAMIL…
உக்ரைனில் மட்டும் அல்ல, அதனையும் தாண்டி பிரித்தானிய நிலைகள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை ரஷ்யா தாக்கும் என்று அன் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் வெளிப்படையாக கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். உக்ரைன் பிரித்தானியா கொடுத்துள்ள ஆயுதங்களை பாவித்தால், ரஷ்யா கடுமையான தாக்குதலில் இறங்கும் என்று ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், இந்த அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இரு நாடுகளும் நேரடியாக மோதும் நிலை ஏற்படலாம் என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. காரணம் பிரித்தானியா பல நவீன ரக ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கியுள்ள நிலையில், அமெரிக்கா கொடுத்துள்ள ஆயுதங்களைக் காட்டிலும் , பிரித்தானியா சிறிய அளவில் தான் ஆயுதங்களை கொடுத்துள்ளது. இருப்பினும் பிரித்தானியா கொடுத்துள்ள ஆயுதங்கள் என்பது, பல மடங்கு அழிவை ஏற்படுத்தக் கூடியவை என்பது ஒரு புறம் இருக்க, அவை மிக மிக நவீன ரக ஆயுதங்கள் ஆகும். இதனால் ரஷ்ய பாதுகாப்பிற்கு பெரும் பங்கம் ஏற்பட்டுள்ளது.
இது இவ்வாறு இருக்க பிரித்தானியா கொடுத்த சலெஞ்சர் 2 கவச வாகனங்களைப் பாவித்தே, உக்ரைன் படைகள் ரஷ்யாவுக்குள் ஊடுருவி நிலைகொண்டுள்ளது. மேலும் பல நவீன ஏவுகணைகளை பிரித்தானியா உக்ரைனுக்கு கொடுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர், ரஷ்யாவில் ஒரு பிரித்தானிய நபர் கைதாகியுள்ளார். அவர் ரஷ்யாவின் உளவு பார்த்தார் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. பிரித்தானிய உளவுத் துறையைச் சேர்ந்த இந்த நபரை தாம் கைதுசெய்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளதோடு.
ரஷ்யா கடும் ஆத்திரமடைந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. நிலமை மோசம் ஆனால் ரஷ்யா உக்ரைனில் மற்றும் வேறு நாடுகளில் உள்ள பிரித்தானிய தளங்களை ஏவுகணை கொண்டு தாக்கக் கூடும். அப்படி நடந்தால் பிரித்தானியா இதற்கு பதிலடி கொடுக்கவேண்டிய சூழ் நிலை உருவாகும். இது 3ம் உலகப் போருக்கு வித்திடலாம்.