Indian Prime Minister Narendra Modi has said he will “share perspectives” on the peaceful resolution of the conflict between Ukraine and Russia, when he visits Kyiv on Friday 23-08-2024, in Tamil….
இந்தியப் பிரதமர், தற்போது சமாதானப் புறாவாக மாறி, உக்ரைனுக்கு பறந்துள்ளார். உக்ரைன் தலை நகர் கிவ்வுக்கு அவர் சென்றவேளை, முழு அளவில் எல்லாத் தாக்குதலையும் சுமார் 13 மணி நேரமாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகள் நிறுத்தி வைத்திருந்த விடையம், உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்தியா எந்த அளவு முன்னேறியுள்ளது, இந்தியப் பிரதமர் ஒருவருக்கு வெளிநாடு எந்த அளவு மதிப்பும் மரியாதையும் கொடுக்கிறது என்பது தெளிவாகியுள்ளது.
இன் நிலையில் கிவ் சென்ற நரேந்திர மோடி, தான் புட்டினுடன் பேசி எப்படி என்றாலும் நிலந்தர போர் நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர உள்ளதாக உக்ரைன் மக்களுக்கு அறிவித்துள்ளார். இதேவேளை நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் புட்டின் உடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க மற்றும் பிரிட்டன் அதிபர்கள் உக்ரைன் சென்றால், எந்த அளவு பாதுகாப்பு வழங்கப்படுமோ அந்த அளவு கடுமையான பாதுகாப்பை உக்ரைன் அதிபர் மோடிக்கு வழங்கி இருந்தார்.
போலந்து நாட்டு வான் பரப்பில் இருந்து உக்ரைன் நாட்டு வான் பரப்பு வரை, இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் விமானத்திற்கு அதி உச்ச பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும். இந்தியா ரஷ்யாவுடன் நெருங்கிய நட்பில் உள்ளது. இன் நிலையில் நடு நிலை வகிக்கும் இந்தியாவால் சிலவேளைகளில் யுத்த நிறுத்தம் ஒன்றைக் கொண்டுவர முடியும் என்று அவதானிகள் கருத்து வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் புட்டின் கைகளில் தான் எல்லாமே உள்ளது.