பெற்றோல் விலை கூடலாம் … காரணம் …ரஷ்யாவின் மாபெரும் எண்ணைக் குதத்தை தகர்த்தது உக்ரைன் !

பெற்றோல் விலை கூடலாம் … காரணம் …ரஷ்யாவின் மாபெரும் எண்ணைக் குதத்தை தகர்த்தது உக்ரைன் !

உக்ரைன் நாட்டின் ஆளில்லா தற்கொலை தாரி விமானமான “கமிக்ஷா” என்று அழைக்கப்படும் விமானம் , பெரும் எண்ணைக் குதல் ஒன்றின் மேல் மோதி அதனை வெடிக்கவைத்துள்ளது. Proletarsk diesel facility என்ற இந்த பெரும் நிறுவனம் ரஷ்ய ராணுவத்திற்கும் , ஏனைய ஐரோப்பிய நகரங்களுக்கும் பெற்றோல் மற்றும் டீசலை ஏற்றுமதி செய்து வருகிறது. குறித்த இந்த எண்ணைக் குதம் மீது உக்ரைன் சுமார் 3 நாட்களுக்கு முன்னரே தாக்குதல் நடத்தி இருந்தது.

இன்று(23 ஆகஸ்ட்) வரை இந்த நெருப்பை ரஷ்யாவால் அணைக்க முடியவில்லை. பல்லாயிரக் கணக்கான மசகெண்ணை எரிந்து நாசமாகியுள்ளதோடு. இன்னும் அது எரிந்துகொண்டு தான் இருக்கிறது. இதனால் ரஷ்யா தனது ஏற்றுமதியை குறைக்கக் கூடும். எனவே உலகளாவிய ரீதியில் மசகெண்ணைக்கு கிராக்கி ஏற வாய்ப்புகள் உள்ளதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

இதனால் ஐரோப்பிய நாடுகளில், பெற்றோல் மற்றும் டீசலின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. இல்லையென்றால் இந்த நிலையை சமாளிக்க அமெரிக்கா தனது கையிருப்பில் உள்ள மசகெண்ணையை சந்தையில் இறக்கி, நிலமையை சீர் செய்ய வாய்ப்புகள் உள்ளது.

Source : MOD