பொதுவாக அமெரிக்காவில் யார் ஜனாதிபதியாக பொறுப்பை ஏற்றாலும், அவர் பிரித்தானியா வந்து அன் நாட்டு மன்னரை அல்லது மகாராணியை சந்தித்துச் செல்லவேண்டும் என்பது பல நூறு வருடங்களாக கடைப் பிடிக்கப்பட்டு வரும் மரபு. அந்த வகையில், 2017ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில், ரம் வெற்றியடைந்தார். அதன் பின்னர் அவர் முதன் முதலாக பிரித்தானியாவுக்கு வந்து மகாராணியைச் சந்தித்தார். ஆனால் அந்தச் சமயம்..
அவர் மகாராணியோடு மிகவும் அநாகரீகமாக பேசியுள்ளார். தான் ஒரு அமெரிக்க அதிபர் என்ற எகத்தாளம் அவரிடம் இருந்துள்ளதோடு. மகாராணி முன்பாகவே வைத்து தனது மனைவி மெலினாவை கடுமையாகப் பேசியுள்ளார். “”நான் சொன்னால் நீ கேட்டே ஆக வேண்டும்”” என்னுடைய முடிவு தான் இறுதி என்று எல்லாம் மனைவியோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை மகாராணி மிகவும் உண்ணிப்பாக அவதானித்துக்கொண்டு இருந்துள்ளார்.
பெண்களுக்கு மதிப்புக் கொடுக்காத இந்த மனிதரோடு பேசி, எந்த வகையிலும் வேலைக்கு ஆகாது என்று அவர் அன்றே தெரிந்துகொண்டார் என்று தற்போது வெளியாகியுள்ள ஒரு நூலில் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரம் குறித்து வெளியாகி வரும் தகவல்கள், அமெரிக்காவில் அவருக்கு இருக்கும் செல்வாக்கை வெகுவாக குறைக்கும் வண்ணம் உள்ளது. இதனால் கமலா ஹரிசுக்கான ஆதரவு பெருக வாய்ப்புகள் உள்ளது என்றும் கூறலாம்.