வரும் நவம்பர் மாதம், நடைபெறவுள்ள, அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மிகக் கடுமையான போட்டி நிலவுகிறது. மிகவும் குறைந்த பட்சத்திலேயே இந்திய வம்சாவழி கமலா ஹரிஸ் முன் நிலை வகிக்கிறார். இதேவேளை ஒரு பெண் அமெரிக்காவை ஆழுவதா ? என்று கேள்வி எழுப்பி ரம் , பல சதித் திட்டங்களை அரங்கேற்றி வரும் நிலையில். அமெரிக்கா 2டாக உடைந்துள்ளது. அதுவும் பெண்கள் – ஆண்கள் என்று தான், இப்படித் தகவல் வெளியிட்டுள்ளது அமெரிக்க ஊடகங்கள்.
காரணம் அமெரிக்காவில் உள்ள பெண்களில் 80% சத விகிதமானவர்கள் கமலா ஹரிசுக்கு வாக்குப் போட உள்ளார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் ஆண்கள் பலர் ரம்புக்கு தான் வாக்குப் போட வேண்டும் என்ற மன நிலையில் உள்ளார்கள். ஆண்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், உலகப் போர் என்று ஒன்று உருவாகினால், அமெரிக்க பெண் அதிபரால் அதனைச் சரிவர கையாள முடியாது. பல கடுமையான முடிவுகளை பெண்கள் எடுக்க மாட்டார்கள் என்று கருதுகிறார்களாம்.
இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. வரும் நவம்பர் மாதம் நடைபெறும் தேர்தலில் கமலா ஹரிஸ் வெற்றியடைவாரா என்பது ஒரு மதில் மேல் பூனை போன்ற நிலையில் உள்ளது. எந்தப் பக்கமும் அந்தப் பூனை பாயும் என்ற நிலை தான். எவராலும் சரியாக கணிக்கவே முடியவில்லை என்பது தான் யதார்த்தம்.