4 விருதுகளை அள்ளிய ‘பொன்னியின் செல்வன்’ – சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு!

4 விருதுகளை அள்ளிய ‘பொன்னியின் செல்வன்’ – சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு!

2022ம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.2022-ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது பொன்னியின் செல்வன் பாகம் 1 திரைப்படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது

70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்புகள்!

சிறந்த தமிழ்படம் – பொன்னியின் செல்வன் 1

சிறந்த தெலுங்கு திரைப்படம் – கார்த்திகேயா 2

சிறந்த மலையாள திரைப்படம் – சவுதி வெள்ளக்கா சிசி 225/2009

சிறந்த கன்னடத் திரைப்படம் – KGF 2

சிறந்த தமிழ் படம்:

இதில் சிறந்த தமிழ் படமாக, மணிரத்னம் தயாரித்து இயக்கிய பொன்னியின் செல்வன் 1 படம் தேர்வு செய்யப்பட்டது. இந்த படத்துக்கு சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலி வடிவமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு என மொத்தம் 4 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகை:

மேலும் தனுஷ் நடிப்பில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் படத்திற்கு சிறந்த நடிகை, சிறந்த நடனம் ஆகிய 2 விருதுகள் அறிவிக்கப்பட்டன.


பொன்னியின் செல்வன் , நித்யா மேனன் ,தேசிய விருதுகள் , national award ,

70th-national-awards