ஹாலிவுட்டில் நடிக்காதது ஏன்…? வெளிப்படையாக கூறிய ஷாருக்கான்!

ஹாலிவுட்டில் நடிக்காதது ஏன்…? வெளிப்படையாக கூறிய ஷாருக்கான்!

இந்திய சினிமாவின் நட்சத்திர நடிகர் ஆன ஷாருக்கான் அங்கு தொடர்ச்சியாக பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்களில் தொடர்ந்து முன்னணி நடிகராக இடத்தை பிடித்தார். 58 வயதாகும் ஷாருகான் இன்னும் அவரது மார்க்கெட் குறையாமல் நட்சத்திர நடிகராக அந்தஸ்தை பிடித்திருக்கிறார்.

கடைசியாக அவர் ஜவான் என்ற திரைப்படத்தின் நடித்திருந்தார். அந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அவருக்கு அமைந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், லோகார்னோ திரைப்பட விழாவில் ஷாருக்கானுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

அப்போது ஷாரூக்கானிடம், ஹாலிவுட்டில் நடிக்காதது ஏன் என்பதை குறித்தும் ஷாருக்கான் பேசியுள்ளார். அதில், இந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் எனக்கு கிடைத்த மரியாதையும், பாராட்டுகளும் மகத்தானது. அதனால் என் ரசிகர்களுக்கு பிடித்த மாதிரி எனக்கு ஏற்ற கதை அமைந்தால் கண்டிப்பாக ஹாலிவுட்டில் நடிப்பேன் என்றும், தற்போது வரை அவ்வாறு கதை அமையவில்லை அதனால் ஹாலிவுட்டில் நடிக்கவில்லை என்றும் கூறினார்.

நடிகர் ஷாருக்கான், shahrukh khan , cinema news ,