வசூல் வேட்டையாடும் ” தங்கலான் ” PRE-BOOKING’ல் இத்தனை கோடியா?

வசூல் வேட்டையாடும் ” தங்கலான் ” PRE-BOOKING’ல் இத்தனை கோடியா?

பீரியாடிக் ஃபிலிம் கதைகளத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் தான் தங்கலான். இப்படத்தில் ஹீரோவாக நடிகர் விக்ரம் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். இப்படத்தை பா ரஞ்சித் தன்னுடைய ஸ்டைலில் உருவாக்கி இருக்கிறார் இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எஅதிகரித்துள்ளது. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து மாளவிகா மோகனன் பார்வதி பசுபதி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கும் இந்த படம் கிட்டத்தட்ட ரூ.100 முதல் 150 கோடி வரை பொருட்செலவில் எடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தின் தமிழக உரிமை ரூ.25 கோடிக்கு விற்பனையாக இருப்பதாக சமீபத்திய தகவல் கிடைத்திருக்கிறது. இதுவே இப்படத்தின் மாபெரும் வெற்றியாகவும் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் தூண்டி இருக்கிறது. ஏனென்றால் இதற்கு முன்னர் வெளிவந்த விக்ரமின் ‘கோப்ரா” திரைப்படம் ரூ.17 கோடி தான் விற்பனையானது. இப்படத்தின் பிரீ புக்கிங் துவங்கிய நிலையில் இதுவரை ரூ.4.5 கோடி வரை வசூல் ஈட்டியதாக தகவல்கள் கூறுகிறது. இதனால் கண்டிப்பாக முதல் நாளிலே பாக்ஸ் ஆபிஸில் மாபெரும் சாதனை படைக்கும் என நம்பலாம்.

தங்கலான் , விக்ரம், thangalaan , Vikram , cinema news , kollywood news , latest cinema new