ஸ்கூல் பொண்ணு மாதிரி ரிப்பன் கட்டிக்கிட்டு கியூட்டா போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

ஸ்கூல் பொண்ணு மாதிரி ரிப்பன் கட்டிக்கிட்டு கியூட்டா போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் பாலிவுட் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ் ஒவ்வொரு படத்திலும் தனது மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எல்லோரையும் மெய்சிலிர்க்க வைப்பார்.

குறிப்பாக அவரது நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான் நடிகையர் திலகம். இந்த படத்தில் நடிகை சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடித்திருப்பார். அவ்வளவு கச்சிதமாக அந்த படத்திற்கு பக்காவாக பொருந்தும் வகையில் கீர்த்தி சுரேஷ் தனது மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷ் ரகு தாத்தா திரைப்படத்தின் ப்ரமோஷன்களில் கலந்துக்கொண்டு வருகிறார்.

அப்படி சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷ் தலையில் ரிப்பன் கட்டிக்கொண்டு பார்க்கவே ஸ்கூல் பொண்ணு மாதிரி ரொம்ப க்யூட்டா ஸ்லீவ்ல சேலையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்துள்ளார்.

கீர்த்தி சுரேஷ் , keerthy suresh , Cinema news , latest photos ,