இந்திய கிரிக்கெட் வீரர் ஆன ஹர்திக் பாண்டியா பிரபல பாலிவுட் நடிகையான நடாஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக கோலாகலமாக கடந்த 2020ல் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்த நிலையில் தன்னுடைய மகனுக்கு தற்போது நான்கு வயதாகிறது.
ஹர்திக் பாண்டியா சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலக கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றதற்கு மிக முக்கிய போட்டியாளராக அவர் பார்க்கப்பட்டார். இதனால் ஹர்திக் பாண்டியாவை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இப்படியான சமயத்தில் ஹர்திக் பாண்டியாவும் அவரது மனைவியும் நட்டாஷாவும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக இருவருமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
அந்த பதிவில் நங்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக பிரிந்து வாழ்க வாழப் போகிறோம் இதுதான் எங்களது சரியான முடிவு. இந்த முடிவில் எங்களுடைய மகன் எந்த விதத்திலும் பாதிக்கப்படாதவாறு இருவரிடமும் வளருவான். நாங்கள் அவருக்கு தேவையான எல்லாவற்றையும் செய்வோம் என ஹர்திக் பாண்டியா மற்றும் நட்டாஷா இருவரும் கூறி இருந்தார்கள்.
இப்படி இவர்கள் அறிவித்து விவாகரத்து செய்து கிட்டத்தட்ட ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் தற்போது ஹர்திக் பாண்டியா பிரபல பிரிட்டிஷ் பாடகியான ஜாஸ்மின் வாலியா என்பவருடன் ரகசியமாக டேட்டிங் செய்து வருகிறார். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் மைக்கோனோஸ் என்ற தீவிற்கு அவுட்டிங் சென்று அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஹர்திக் பாண்டியா , ஜாஸ்மின் வாலியா , hardik pandya , hardik pandya new girlfriend , hardik pandya dating ,