மங்காத்தாவையே மிஞ்சிடும்…”GOAT”படத்தின் கதை இதுதான் – வெங்கட் பிரபுவே சொல்லிட்டாரு!

மங்காத்தாவையே மிஞ்சிடும்…”GOAT”படத்தின் கதை இதுதான் – வெங்கட் பிரபுவே சொல்லிட்டாரு!

நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார்.

இரட்டை வேடத்தில் விஜய் இப்படத்தில் நடிக்கிறார். இதில் அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகா நடிக்கிறார். அவர்களுடன். லைலா, பிரசாந்த் , பிரபுதேவா, மோகன் உள்ளிட்ட மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இப்படத்தின் ஒன் லைன் ஸ்டோரியை இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். “SATSனு பெயர். SPECIAL ANTI TERRORIST SQUADனு சொல்வார்கள். RAW அமைப்போட இணைஞ்சு வேலை செய்கிற ஒரு குரூப். அதில் ஒரு சமயத்துல சிறப்பாக வேலை செய்தவங்க சிலர். அவர்கள் ஒரு காலத்தில் செய்த விஷயம், இப்போ ஒரு பிரச்னையாக வந்து அவங்க முன்னாடி நிற்கிறது. அதை எப்படி எதிர்கொண்டு வெல்கிறார்கள் என்பது மையக்கரு” என படத்தின் கதையை கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் கிட்டத்தட்ட மங்காத்தா ரேஞ்சிற்கு இருக்கும்னு சொல்லுங்க என கூறி வருகிறார்கள்.


நடிகர் விஜய், வெங்கட் பிரபு , GOAT திரைப்படம், vijay , venkat prabhu,