“விடாமுயற்சி” படத்தை பார்த்த அஜித்தின் முதல் விமர்சனம்!

“விடாமுயற்சி” படத்தை பார்த்த அஜித்தின் முதல் விமர்சனம்!

நடிகர் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த திரைப்படம் ஆரம்பிக்கும் போது சில பல பிரச்சனைகளில் சிக்கி பின்னர் சுமூகமாக படப்பிடிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இப்படத்தில் விஜய்க்கு அஜித்திற்கு ஜோடியாக நடிகை திரிஷா நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான லைக்கா தயாரித்திருக்கிறது. இப்படத்தில் அஜித் திரிஷாவுடன் இணைந்து அர்ஜுன், ஆரவ் , ரெஜினா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். அவர்களின் போஸ்டர்கள் கூட அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்திருந்தது.

இந்த நிலையில் தற்போது இப்படத்தை பார்த்துவிட்டு அஜித் கூறிய முதல் விமர்சனத்தை பற்றி தான் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது . அதாவது விடாமுயற்சி படத்தை பார்த்த நடிகர் அஜித் மகிழ் திருமேனியை அழைத்து…. படத்தின் ரஷ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. படம் ஹாலிவுட் தரத்தில் வந்திருக்கிறது என்னை மிகவும் இம்ப்ரெஸ் செய்துவிட்டீர் என்று இயக்குனர் மகிழ் திருமேனியை பாராட்டியுள்ளாராம்.

நடிகர் அஜித் , விடாமுயற்சி, Actor Ajith , Cinema news